Wednesday, June 22, 2016

•நல்லாட்சி அரசின் தந்திரம்!

•நல்லாட்சி அரசின் தந்திரம்!
நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் அவர்கள் சொகுசு பஸ் ஒன்றை பாரிய விளம்பரத்தோடு காட்லிக் கல்லூரிக்கு வழங்கியுள்ளார்.
இந்த சொகுசு பஸ் எந்தளவு அத்தியாவசியமானது என்பதை காட்லிக் கல்லூரியும் தெரியப்படுத்தவில்லை. ரணில் அவர்களும் தெரியப்படுத்தவில்லை.
ஆனால் வன்னியில் பல பாடசாலைகளுக்கு ஒழுங்கான கூரை கூட இல்லாத நிலையில் அதைவிட அத்தியாவசியமாக இந்த பஸ் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.
அண்மையில் காட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் பாடகர் ஜேசுதாஸ் அவர்களுக்கு வழங்கிய பணத்தில் நிச்சயம் இதேபோல் பல சொகுசு பஸ் வாங்கியிருக்க முடியும்.
காட்லிக் கல்லூரியின் பெயரால் பழைய மாணவர்கள் புலம்பெயர் நாடுகளில் ஆடம்பர செலவுகள் செய்கிறார்கள். ஆனால் கல்லூரியோ ரணில் அரசிடம் சொகுசு பஸ்க்காக கையேந்தி நிற்கிறது.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னிப் பாடசாலைகளுக்கு அரசு உதவி செய்வது கடமையாகும்.
ஆனால் அரசு காட்லிக்கல்லூரிக்கு சொகுசு பஸ் கொடுத்துவிட்டு தமிழ் மக்களின் கல்வி தேவைகள் யாவும் இந்த அரசால் பூர்த்தி செய்யப்பட்டது போன்று விளம்பரம் செய்கிறது.
மிகவும் புகழ் பெற்ற காட்லிக்கல்லூரி ரணில் அரசின் இந்த தந்திர சூழ்ச்சிக்கு எப்படி பலியானார்கள் என்பது புரியவில்லை.
இனியாவது பாடசாலைகள் மட்மன்றி பாடசாலை பழைய மாணவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
எது அத்தியாவசியம்? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும?; என்பதை தமிழ் இன நலன் சார்ந்து சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும்.
இது காட்லிக் கல்லூரிக்கு மட்டுமன்றி யாழ்ப்பாணத்து புகழ் மிக்க பாடசாலைகள் அனைத்திற்கும் பொருத்தமாகும்.

No comments:

Post a Comment