Wednesday, June 22, 2016

•சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என ஏன் பாரதி பாடினான்?

•சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என ஏன் பாரதி பாடினான்?
கடந்த 30.05.2016 யன்று லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “பாரதி பற்றி அறிந்ததும் அறியாததும்” என்னும் தலைப்பில் உரையாடல் ஒன்று நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் பௌசர் தலைமையில் இவ் உரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆய்வாளர், எழுத்தாளர், ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்கள் பாரதி பற்றி உரையாற்றினார்.
அவர் பின்னர் கலந்கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பார்வையாளர் ஒருவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி ஏன் பாடினார்?” என கேள்வி எழப்பினார்.
அதற்கு பதில் அளித்த வெங்கடாசலபதி அவர்கள் “பாரதி இலங்கையையும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகவே கருதியிருப்பான்” என்று கூறினார்.
வெங்கடாசலபதியின் இந்த பதில் பொருத்தமானதாக எனக்கு தோன்றவில்லை.
ஏனெனில் இலங்கையில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருவதும் அவர்களது வரலாறும் நன்கு தெரிந்துகொண்ட பாரதி எப்படி இலங்கையை சிங்கள தீவு என அழைக்க முடியும் என்பதே கேள்வியாகும்.
இதற்கு தகுந்த பதில் தெரிந்தவர்கள் யாராவது கூறுவீர்களா?

No comments:

Post a Comment