Wednesday, June 22, 2016

•நாம் ஏன் பேரறிவாளனுக்காக குரல் கொடுக்க வேண்டும்?

•நாம் ஏன் பேரறிவாளனுக்காக குரல் கொடுக்க வேண்டும்?
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு பேரறிவாளன் ஆதரவளித்தார்.
அதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் அங்கம் வகித்த திராவிடர் கழகம் அவரை கைவிட்டது
அவர் நம்பிய தலைவர் வீரமணி அவரை ஏமாற்றிவிட்டார்.
இருந்தும் அவர் மனம் தளரவில்லை. உறுதி குன்றவில்லை.
25 வருட சிறை வாழ்க்ககையின் பின்னரும்கூட
அவர் இளமைக்காலம் முற்றாக வீணாகிப் போனாலும்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்தமைக்காக அவர் வருந்தவில்லை.
விடுதலையாகி வெளியே வந்தாலும் இனியும் தமது ஆதரவு தொடரும் என்றே கூறுகிறார்.
லண்டனில் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு ஈழத் தலைவர் சுரேன்
இவர் லண்டனில் சோனியா காந்தியை சந்தித்து மட்டுமன்றி அவர் கண்களில் இரக்கத்தை கண்டேன் என்று பேட்டி கொடுத்தார்.
அவருக்கு பேரறிவாளன் தியாகம் தெரியவில்லையா?
அவருக்கு இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தெரியவில்லையா?
அவருக்கு இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறுவு செய்யப்பட்ட தமிழ் பெண்கள் தெரியவில்லையா?
அவருக்கு இந்திய உதவியுடன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 40 அயிரம் மக்கள் தெரியவில்லையா?
இதை எல்லாம் மறந்து எப்படி அவரால் சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் காண முடிந்தது?
சிறைவைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்காக,
செங்கொடி தனது உயிரைக் கொடுத்தாள்.
கட்சி பேதமின்றி தமிழக மக்கள் குரல் கொடுக்கின்றனர்.
சிறு குழந்தைகள் கூட கடும் வெய்யிலில் ஊர்வலம் போகிறார்கள்.
ஆனால் சோனியாவை சந்தித்த சுரேனுக்கு பேரறிவாளனை விடுதலை செய்யும்படி கோர மனம் வரவில்லை.
25 வருடங்களாக பேரறிவாளன் விடுதலைக்காக ஓயாது நடந்து திரியும் அவரது தாயாரும்கூட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளித்தமைக்காக இதுவரை வருந்தவில்லை.
மாறாக பேரறிவாளன் போன்று அவரும் தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகிறார்.
அவர்களது அர்ப்பணிப்பை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் மறத்தல் கூடாது.
பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

No comments:

Post a Comment