•ஆகஸ்டு-30
இன்று உலக காணாமல் போனோர் தினமாம்.
இன்று உலக காணாமல் போனோர் தினமாம்.
ஒவ்வொரு வருடமும் காணாமல் போனோர் தினம் வருகிறது. ஆனால் இலங்கையில் காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்டவில்லை.
பான்கி மூன் வரகிறார். அமெரிக்க செயலர் வருகிறார். இந்திய அமைச்ர் வருகிறார். ஆனால் காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
காணாமல் போனோரை கண்டு பிடிப்பதாக ஓட்டுப் பெற்ற சம்பந்தர் அய்யா, ஒருபடியாய் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கண்டு பிடித்துவிட்டார்.
வடமாகாண சபையாவது காணாமல் போணோரை கண்டு பிடிப்பார்கள் என்று பார்த்தால் அவர்கள் கவிஞர் வைரமுத்துவை கண்டு பிடித்து வந்து கச்சேரி நடத்துகிறார்கள்.
காணாமல் போனோரைக் கண்டு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் வார்த்தையாவது எமது தலைவர்கள் கூறியிருக்கலாம்.
ஆனால் அவர்களோ தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதிலும் தமக்கு குடை பிடிக்க ஆள் தேடுவதிலும் மும்முரமாய் இருக்கிறார்கள்.
எமது தலைவர் சம்பந்தர் அய்யா மாத்தறைக்கு ஓடிச்சென்று “நாடு பிரிவடைய விடமாட்டடேன்” என்று உறுதிமொழி வழங்கிறார்.
என்னே கொடுமை இது?
காணாமல் போனோர் விடயத்திற்கு யார் நியாயம் வழங்குவது?
இவர்களுக்கு நியாயம் வழங்காதவரை “காணாமல் போனோர் தினம்” என்ன அர்த்தம் பெற்றுவிடப் போகிறது?
No comments:
Post a Comment