Thursday, August 18, 2016

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்போர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்போர்
இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?
பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கிய இந்திய அரசு
பங்களாதேஸ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கிய இந்திய அரசு
ஈழ அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.
தமக்கு குடியுரிமை வழங்குமாறு கோரி ஈழ அகதிகள் சென்னையில் பேரணி நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்ல திரும்பிப் போவோருக்கான தண்டப் பணத்தையும் நீக்குமாறு கோரியுள்ளனர்.
இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்பும் ஒவ்வொரு அகதியும் வருடமொன்றுக்கு தண்டப்பணம் 3600ரூபாவும் நுழைவிசைவுக் கட்டணம் 13500 ரூபாவும் செலுத்த வேண்டும்.
பல வருடங்கள் அகதியாக இருந்தவர்கள் திரும்பிச் செல்வதாயின் லட்சக் கணக்கான ரூபாயை கட்ட வேண்டியுள்ளனர்.
இந்த பணத்தை கட்ட வசதி இல்லாதபடியால் பலர் இலங்கை திரும்ப முடியாமல் இருக்கின்றனர்.
அவுஸ்ரேலியா திரும்பிப் போகும் அகதிகளுக்கு விமான டிக்கட் மட்டுமன்றி 25லட்சம் ரூபா பணம் வழங்கவும் முன்வந்துள்ளது.
ஆனால் இந்தியா பணம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தண்டப் பணத்தையாவது நீக்க முன்வர வேண்டும்.
ENDLF கட்சியின் செயலர் ஞானராஜ் அவர்களும் பேரணியில் கலந்துகொண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
இவருடைய கட்சி கடந்த வருடம் பாத யாத்திரையாக டில்லி சென்று இந்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்தக் கட்சி இந்திய விசுவாசக் கட்சியாகும். இந்தியா தமிழீழம் பெற்று தரும் இன்றும் கூறிக்கொண்டிருக்கும் கட்சி.
இவர்களால் அகதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தையெ நீக்க முடியவில்லை. ஆனால் இந்தியா மூலம் தமிழீழம் எடுக்கப்போவதாக கூறுகிறார்கள்.
இந்தியா இலங்கை ரயில்வே அபிவிருத்திக்கு 2000கோடி ரூபா கொடுத்திருப்தாக கூறுகிறார்கள்.
தன்னுடைய நாட்டில் ரயிலில் குண்டி கழுவக்கூட ஒரு கோப்பையை வைக்காத இந்திய அரசு இலங்கை ரயில்வேக்கு ஏன் உதவி செய்கிறது?
தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையினாலேயே இப்படி இந்திய அரசு உதவி செய்வதாக கூறுவோரிடம் நாம் கேட்க விரும்புவது “ அகதியின் தண்டப் பணத்தைக்கூட நீக்க விரும்பாத அரசு இலங்கையில் தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை எப்படி நம்புவது? “
இந்திய அரசு விசுவாசிகள் இதற்கு பதில் தருவார்களா?

No comments:

Post a Comment