Thursday, August 18, 2016

•நல்லாய் உருளுங்கடா கொலஸ்ரோலாவது குறையட்டும்!

•நல்லாய் உருளுங்கடா
கொலஸ்ரோலாவது குறையட்டும்!
செய்தி- லண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் திரண்டு தேர்த் திருவிழா.
இங்கிலாந்தில் 2லட்சம் ஈழத் தமிழர்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
இவர்களுக்கு சுமார் 40 மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன.
ஒரு கோவிலின் ஆகக் குறைந்த பெறுமதி 300 ஆயிரம் பவுண்ட்ஸ் எனக் கொண்டால்
40 கோவில்களின் மொத்த பெறுமதி 12000000 பவுண்ட்ஸ். அதாவது 2400000000 ரூபா.
அதாவது அண்ணளவாக 250 கோடி ரூபா. (இது மிகவும் குறைந்த கணக்கு)
இங்கிலாந்தில் மட்டும் 250 கோடி ரூபா எனில் உலகம் பூராவும் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் கோவில்களின் மொத்த பெறுமதி நிச்சயம் 2000 கோடி ரூபாக்களை தாண்டும்.
இங்கு எனது கேள்வி என்னவெனில்,
எமக்கு இத்தனை கோவில்கள் அவசியமா?
தொடர்ந்தும் கோவில்கள் உருவாக்கப்படுவது அவசியமா?
கோவில்களுக்காக இத்தனை கோடி ரூபா செலவு செய்யத்தான் வேண்டுமா?
இந்த பணத்தை தாயகத்தில் உள்ள உறவுகளுக்காக செலவு செய்தால் என்ன?
இங்கு எனது கவலை என்னவெனில்,
கோயில் திருவிழாக்களுக்காக ஆயிரக் கணக்கில் திரள்கிறார்கள்.
சினிமா கலைஞர்கள் வந்தால் ஆயிரக் கணக்கில் செலவு செய்கிறார்கள்
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள்கூட எமக்காக போராடுகிறார்கள்.
ஆனால் எம்மவர்கள் எமக்காக ஒன்று திரள தயங்கிறார்களே?
தமிழ் இனி மெல்ல சாகும் என்பது தெரியாது
ஆனால் ஈழ தமிழ் இனம் இனி மெல்ல அழியும் என்றே சொல்ல தோன்றுகிறது.

No comments:

Post a Comment