Wednesday, August 31, 2016

நியுசிலாந்து வாழ் தமிழ் மக்களின் கவனத்தைப் பெற்ற தமிழக சிறப்புமுகாம் பற்றிய நூல் அறிமுக நிகழ்வு!

Special Camp added 4 new photos.
•நியுசிலாந்து வாழ் தமிழ் மக்களின் கவனத்தைப் பெற்ற
தமிழக சிறப்புமுகாம் பற்றிய நூல் அறிமுக நிகழ்வு!
கடந்த சனிக்கிழமையன்று 27.08.16 யன்று நியூசிலாந்து நாட்டில் ஆக்லண்ட் நகரில் “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
சுமார் 800 தமிழ் குடும்பங்கள் வாழும் ஆக்லண்ட் நகரில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இவ் நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஊடகவியலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பேராசிரியர் வி. நித்தியானந்தன், கலாநிதி அனா பொன்னம்பலம், சண் வேலுப்பிள்ளை, வழக்கறிஞர் பிரேம்குமார், பி.தயாகரன், ஆகியோர் உரையாற்றினார்கள்.
வழக்கறிஞர் புகழேந்தி, தோழர் தமிழ்நேயன் (பொதுச்செயலாளர்- தமிழ்தேச மக்கள் கட்சி) மற்றும் செந்தமிழினி பிரபாகரன்- ஊடகவியலாளர் (கனடா) ஆகியோரின் காணொளி உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் சிறப்பு முகாம் கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நூறு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
நூல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறப்பு முகாம் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு நியூசிலாந்து வாழ் தமிழ் மக்களிடையே எற்பட வழி சமைத்துள்ளது.
அடுத்து, நியூசிலாந்தில் வெலிங்டன் நகரிலும் இது போன்ற ஒரு நிகழ்வை நடத்துவதற்கு ஆர்வத்தையும் உத்வேகத்தையும் இவ் நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
•சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இந்திய பிரதமர், முதலமைச்சர்ஆகியோருக்கு கடிதம் எழுதல்
•சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளின் கவனத்திற்கு சிறப்புமுகாம் பிரச்சனையை கொண்டு செல்லல்.
•சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றிய ஆவணப்படம் (டாக்குமென்றி) ஒன்றை தயாரித்தல்.
•இயன்றளவு இன்னும் அதிகமாக தமிழ் மக்கள் மத்தியில் சிறப்புமுகாம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இத்தனைக்கும் காரணமான நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் NZ-Srilanka-Forced-Migrants-Support-Group அமைப்பிற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கருத்துகள் மக்களைப் பற்றிக்கொண்டால் மாபெரும் பௌதிக சக்தி உருவாகும்.
சிறப்புமுகாமை மூடவைக்கும் மக்கள் சக்தியை உருவாக்குவோம்

No comments:

Post a Comment