Thursday, August 18, 2016

•நாய்க்கு செத்தவீடு நடத்திய கனடா தமிழர்!

•நாய்க்கு செத்தவீடு நடத்திய கனடா தமிழர்!
இது
பையித்தியக்காரத்தனம் என்பதா?
அல்லது பணத் திமிர் என்பதா?
இதை என்னவென்று அழைப்பது?
நாம் எந்த மாதிரி உலகத்தில் வாழுகிறோம்?
வெளிநாடுகளில் நாய் வளர்ப்பதற்கு அதிகம் செலவாகும். ஒரு நாய் வளர்க்கும் காசில் தாயகத்தில் 5 அனாதைச் சிறுவர்களை வளர்க்க முடியும்.
கனடாவில் ஒரு தமிழர் நாய் வளர்த்தது மட்டுமன்றி அந்த நாய் இறந்தவுடன் ஆடம்பரமாக செத்த வீடு நடத்தியுள்ளார்.
ஜயர் பிடித்து மந்திரம் எல்லாம் ஓதி நடத்திய இந்த செத்தவீட்டிற்கு பல பிரபலங்களும் சென்று துக்கம் விசாரித்தார்களாம்.
இது அவரின் தனிப்பட்ட விடயம். அவர் தனது மனத் திருப்திக்கு செய்யும் இந்த விடயம் குறித்து முகநூலில் விமர்சிப்பது அழகு அல்ல என்று சில ஜனநாயகவாதிகள் அவருக்காக குரல் கொடுக்க வரலாம்.
அவர்களிடம் நான் கேட்க விரும்புவது என்ன வென்றால்,
வறுமை காரணமாக வன்னியில் தன் 3 குழந்தைகளையும் கொன்ற தாய்க்கு இந்த பணத்தை கொடுத்திருந்தால் அக் குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாம் அல்லவா?
கிளிநொச்சியில் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட மாணவனுக்கு இந்த பணத்தை கொடுத்து உதவியிருக்கலாம் அல்லவா?
நாட்டில் போராடியவர்கள் வறுமையில் வாடும்போது அந்த போராட்டத்தை வைத்து அகதி அந்தஸ்து பெற்றவர்கள் இவ்வாறு ஆடம்பர செலவுகள் செய்வது நியாயமா?
முட்டாள்தனத்தில் அல்லது பையித்திக்காரத்தனத்தில் சிறந்து விளங்குபவர்கள் கனடா தமிழரா? அல்லது லண்டன் தமிழரா? என பட்டிமன்றமே நடத்தலாம்.
அந்தளவுக்கு லண்டன் தமிழர் சிலரும் தாங்கள் கனடா தமிழருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கின்றார்கள்.
கனடா தமிழர் நாய்க்கு செத்தவீடு நடத்தினார் என்றால் லண்டன் தமிழர் எலிக்கு செத்தவீடு நடத்தியுள்ளார்.
லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தன் மகளின் ஆசைப்படி வளர்ப்பதற்கு வெள்ளை எலி வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு பல செலவுகள். 35 பவுண்ட்ற்கு ஊசி போட வேண்டும். இருந்தும் சில நாட்களில் அந்த எலி செத்துவிட்டது.
பின்னர் மகளின் விருப்பப்படி மனிதர்களுக்கு செய்வது போல் ஒரு நிறுவனம் மூலம் மரியாதையுடன் அந்த எலி அடக்கம் செய்யப்பட்டது. எலி வாங்கிய காசைவிட அதன் செத்தவீடு செலவு அதிகமானது.
இப்போது கூறுங்கள்!
நாம் என்னமாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்?
குறிப்பு- ஒரு சந்தேகம்!
கனடாவில் நாயக்கு செத்தவீடு செய்யவென தனியாக ஜயர்மார் இருக்கிறார்களா? அல்லது நாய்க்கு செத்தவீடு நடத்திய ஜயரை இனி மனிதருக்கு செத்தவீடு நடத்த பிடிப்பார்களா?

No comments:

Post a Comment