Thursday, August 18, 2016

•ஜரோம் சர்மிளாவின் முடிவு அகிம்சையின் முடிவா?

•ஜரோம் சர்மிளாவின் முடிவு அகிம்சையின் முடிவா?
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குமாறு கோரி 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஜரோம் சர்மிளா இன்று தனது உண்ணாவிரத்தை கைவிட்டார்.
அகிம்சையை போதித்த இந்தியாவிலேயே அகிம்சைப் போராட்டத்தினால் பயன் இல்லை என்பதை ஜரோம் சர்மிளாவின் இந்த முடிவு காட்டுகிறது.
அகிம்சைப் போராட்டத்தினால் தீர்வு பெற முடியாது என்பதை உணர்வதற்கு ஜரோம் சர்மிளாவிற்கு 16 வருடங்கள் எடுத்திருக்கிறது.
இனியாராவது அகிம்சை போதிக்க வருபவர்களுக்கு ஜரோம் சர்மிளாவின் இந்த படிப்பினைகள் தகுந்த பதிலாக அமைகிறது.
ஆனால் உண்ணாவிரதத்தைக் கைவிட்ட ஜரோம் சர்மிளா தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
கொதிக்கும் எண்ணெய்யில இருந்து எரியும் நெருப்புக்குள் விழுந்த கதையாக மீண்டும் மோசமான பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
தேர்தல் பாதை மூலமும் தீர்வு பெற முடியாது என்பதை அவர் உணர்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கப் போகிறாரோ தெரியவில்லை.
ஜரோம் சர்மிளா மேற்கொள்ளும் இவ்வாறான தவறான பாதைகள் ஆயுதப் போராட்ட பாதையை முன்னெடுப்வர்களை நசுக்குவதற்கு அரசிற்கு மறைமுகமாக உதவுகிறது என்பதே உண்மையாக இருக்கிறது.
மக்கள் மீது உண்மையாக அக்கறை ஜரோம் சர்மிளாவுக்கு இருக்குமேயானால் அவர் தமது தவறுகளை உணர வேண்டும்.
மணிப்பூரில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் போராளிகளுக்கு ஜரோம் சர்மிளா தனது ஆதரவை தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்.
துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற ஆசான் மாசேதுங் இன் வரிகளின் அர்த்தங்களை ஜரோம் சர்மிளாக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
7 மாநிலங்களில் சுமார் 160 மாவட்டங்களுக்கு மேல் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நக்சலைட்டுகளின் ஆயுதப் போராட்ட பாதையை தெரிந்து கொள்ள வேண்டும்.
“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்பிற்குள் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படுவர். அடக்குறையான முதலாளிவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது"- தோழர் சண்முகதாசன்.

No comments:

Post a Comment