Thursday, August 18, 2016

தோழர் பகத்சிங் பாரதி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்தள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
11 hrs
தமிழ்நாட்டில் உள்ள சமரன் (எம்.எல்) புரட்சிகர அமைப்பைச் சேர்ந்த தோழர் பகத்சிங் பாரதி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்தள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் வணக்கம்.
நேரமின்மை காரணமாக தங்களின் நூலை இன்றுதான் வாசிக்க முடிந்தது. தாமதத்திற்கு மண்ணிக்கவும்.
பல உபயோகமான தகவல்களைக் கொண்டு நன்றாக எழுதியுள்ளீர்கள்.
இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
இந்திய --இலங்கையின் அரசியல் பொருளாதாரா இராணுவ உறவுகளை நன்றாக விளக்கி உள்ளீர்கள்.
இந்தியாவின் வர்க்க பண்பை குறிப்பிடுகையில் தரகு முதலளித்த்துவ வர்க்க அரசு என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் அது நிலவுடமை வர்க்க அரசாகவும் உள்ளதை நீங்கள் குறிப்பிடவில்லை.
மேலும் இந்தியா அமெரிக்காவின் புதிய காலனி அடிமை நாடாக உள்ளதை நீங்கள் குறிப்பிடவில்லை.
இலங்கையின் காலனிய தன்மை பற்றி ஏதும் சொல்லாதது நூலின் பெரும் குறையே என நான் கருதுகிறேன்.
தமிழீழ இனபடுகொலையில் அமெரிக்க--பிரிட்டன் --இந்திய அணியும் , சீன ரசிய அணியும் தீவிரமாக செயல்பட்டது குறித்தும் முக்கியத்துவம் தரப்படவில்லை.
இந்தியாவின் விரிவாதிக்கத்தை நன்றாக அலசியுள்ள நீங்கள் , ஏகாதிபத்திய ஊடுருவல் குறித்து குறைவாகவே எழுதியுள்ளீர்கள்.
தமிழீழ விடுதலை போராட்டத்த்தில் புலிகளின் அளப்பரிய பங்கும்கூட குறைவாகவே உள்ளது (அமைதிப்படையை விரட்டியது என்பதை தவிர ).
இந்தியாவின் விடுதலை போராட்டமும் சரி , இலங்கையின் விடுதலை போராட்டமும் சரி , அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாமல் சாத்தியமில்லை.
இந்திய விரிவாதிக்கத்தை --அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்பிய புலிகள் மீது எமக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் அவற்றை நூலின் நட்புரீதியான விமர்சனமாக வைத்திருக்கவேண்டும்.
புலிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது இருந்த நம்பிக்கைக்கு காரணமாக இங்கிருந்த தமிழ்த்தேசிய குழுக்களும் முக்கிய பங்கு வகித்தன. இந்தியாவை ஏகாதிபத்தியம் என தவறாக வரையறுத்து , அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துரோகத்தை பற்றி பேசுவதே இல்லை.
இன்னும் சொல்ல போனால் , அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்கள். அமெரிக்க தூதரகத்திற்கு நெடுமாறன் வைகோ உள்ளிட்ட தமிழ்த்தேசிய வாதிகள் , இறுதி கட்ட போரின் போது , மனுவும் பூச்செண்டும் அளித்தனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
நீங்கள் முதலிலேயே குறிப்பிட்டுள்ளது சரியானது அல்ல என கருதுகிறேன். தோழர் தமிழரசன் தனிப்பட்ட முறையில் இந்தியாவைப்பற்றி தனது கருத்தை கூறவில்லை. அவர் இருந்த மக்கள் யுத்த குழுவின் நிலைப்பாடுதான் அது.
பிறகு இலங்கையிலும் தனிநாடு , இந்தியாவிலும் தனித்தமிழ் நாடு என கூறி கட்சியை பிளவுபடுத்தி கலியபெருமாளுடன் வெளியேரினார்.
அவர்களின் பின்னால் கேரள வேணு ( செங்கொடி ) குழுவின் அரூபமான சந்தை கோட்பாடு இருந்தது.
அதேபோன்று ஜேவிபி இனவாத அமைப்பாக மாறிவிட்டதை குறித்தும், சிங்கள மக்களிடையே முற்போக்கான இடதுசாரி அமைப்பு எதுவும் இல்லை என்பதும், அதுவரையிலும் தனிஈழம் தான் தீர்வு என்பதும் , அது அமெரிக்க --இந்திய எதிர்ப்பில்லாமல் சாத்தியமில்லை என்பதும் வலுவாக முடித்திருக்கலாம் என்பது எனது கருத்து தோழர்
நன்றி

No comments:

Post a Comment