Thursday, August 18, 2016

•ஈழ அகதிகள் புறக்கணிக்கப்படுகின்றமைக்கு ராஜீவ் கொலைதான் காரணமா?

•ஈழ அகதிகள் புறக்கணிக்கப்படுகின்றமைக்கு ராஜீவ் கொலைதான் காரணமா?
ராஜீவ்காந்தியை புலிகள் கொன்றமையினால்தான் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றமையினால்தான் ஈழ அகதிகளுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றமையினால்தான் இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிப்பதில்லை என்றும் அவர்கள் நியாயம் கூறுகின்றனர்.
அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது,
காந்தியை கோட்சே கொன்றார் என்றுதானே கூறுகிறீர்கள். ஆர்.எஸ.எஸ் கொன்றதாக ஏன் கூறுவதில்லை?
அப்படியென்றால் ராஜீவ் காந்தியை தானு கொன்றார் என்றுதானே கூறவேண்டும். ஏன் புலிகள் கொன்றனர் என்று கூறுகிறீர்கள்?
சரி, புலிகள்தான் கொன்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் பலிகளை தண்டிப்பதுதானே முறை. ஏன் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் தண்டிக்க வேண்டும்?
இந்திரா காந்தியை சீக்கிய இனத்தவர்கள் கொன்றனர். ஆனால் அதற்காக சீக்கிய இனம் முழுவதும் தண்டிக்கபடவில்லை. சீக்கிய இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங 2 முறை பிரதமர் ஆக்கப்பட்டுள்ளார்.
சீக்கிய இனம் மன்னிக்கப்படுகிறது. தமிழ் இனம் தண்டிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் தாக்கினார். ஆனால் அதற்காக சிங்கள இனம் தண்டிக்கப்படவில்லையே. ஆனால் தமிழ் இனம் மட்டும் தொடர்ந்து தண்டிக்கப்படுவது என்ன நியாயம்?
• ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னரே சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
• ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னரே சாதாரண முகாம்கள் கொடுமை முகாம்களாகவே நடத்தப்பட்டன.
• ராஜீவ் காந்தி கொலைக்கு மன்னரே இந்திய ராணுவம் இலங்கை வந்து தமிழர்களை அழித்தது.
• ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னரே தமிழின விரோதப் போக்கை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றாலும்கூட இந்திய அரசு தொடர்ந்தும் தமிழின விரோத போக்கையே மேற்கொள்ளும்.
உண்மை இப்படி இருக்க சிலர் இந்திய அரசின் தமிழின விரோத போக்கை மறைக்க ராஜீவ் கொலையை காரணம் காட்ட முயலுகின்றனர்.
யார் எத்தனை வேடம் போட்டாலும் இனி இந்திய அரசின் முகத்திரை கிழிவதை யாராலும் காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment