Thursday, August 18, 2016

சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நியுசிலாந்தில் நடைபெறும் நூல் அறிமுக நிகழ்வு!

Special Camp
•சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி
நியுசிலாந்தில் நடைபெறும் நூல் அறிமுக நிகழ்வு!
தமிழகத்தில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, நியுசிலாந்தில் “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நான் எழுதிய “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூல் கடந்த வருடம் 21.09.2015 யன்று சென்னையில் தமிழ்தேச மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் 16.10.2015 யன்று கோவையில் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் 25.10.2015 யன்று செய்யாறிலும், 05.11.2015 யன்று திருச்சியிலும் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து 29.11.2015 யன்று கனடாவில் ரொறன்ரோவில்"Campaign to close special camp" என்னும் அமைப்பினரால் நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
அடுத்து 27.08.2016யன்று நியுசிலாந்தில் நூல் அறிமுக நிகழ்வு நடைபெறவுள்ளது. NZ Srilanka Forced Migrant's Support Group" என்னும் அமைப்பு நூலை பணம் கொடுத்து வாங்கி நியுசிலாந்து வாழ் தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அவர்களின் உணர்வு உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
கருத்து மக்களைப் பற்றிக்கொண்டால் அது பௌதீக சக்தி பெற்றுவிடுகிறது. சிறப்புமுகாம் கொடுமைகள் பற்றிய கருத்துகள் மக்களைச் சென்றடைவதால் அது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு வழி சமைக்கும் என நம்புகிறோம்.
“சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் சர்வதேச மன்னிப்புசபை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளனர்.
இந்நூல் எமது தலைவர்களான சம்பந்தர் அய்யா, மற்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களுக்கும், அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் வேண்டுகோள் கடிதத்துடன் சேர்த்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மிகவிரைவில் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இவ் நூல் அறிமுக நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல வருடங்களாக எவ்வித விசாரணையும் இன்றி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்ட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment