Monday, June 29, 2020

•5வது நாளாக தொடரும்

•5வது நாளாக தொடரும் சிறப்புமுகாம் அகதிகளின் உண்ணாவிரதம்! திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 42 அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் தொடர்கிறது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. ஒரு அதிகாரிகூட அவர்களை சென்று சந்திக்கவில்லை. இந்த கொரோனா பிரச்சனை நேரத்திலும்கூட தமிழக அரசு இந்த ஈழத் தமிழ் அகதிகள் மீது இரக்கம் காட்ட மறுக்கிறது. பொதுவாக தேர்தல் நேரங்களில் அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சனை விடயங்களில் வலிய வந்து அக்கறை காட்டுவார்கள். ஆனால் இலங்கையில் தேர்தல் அறிவித்த இந்த நேரத்திலும்கூட இவ் அகதிகளின் விடுதலைக்கு எந்தவொரு அரசியல் தலைவரும் குரல் கொடுக்கவில்லை. இலங்கையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கே தம்மிடம் திறப்பு இல்லை என்று நக்கலாக கூறிய தலைவர் இந்தியாவில் உள்ள அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்பார் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று அக்கறைப்பட்டவர்கள்கூட இந்த அகதிகளின் விடுதலை குறித்து கவனம் கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது. யாராலுமே கண்டு கொள்ளப்படாத பாவப்பட்ட ஜென்மங்கள் இந்த ஈழத் தமிழ்அகதிகள். Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment