Monday, June 29, 2020

•மக்களின் குரல் வளையை நெருக்கும் இந்திய அரசு!

•மக்களின் குரல் வளையை நெருக்கும் இந்திய அரசு! இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் உண்டு என்கிறார்கள். ஆனால் இந்திய அரசின் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க முனைந்தால் அவர்களின் குரல் வளையை நெரிக்கிறார்கள். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியதால் அசாம் விவசாயிகள் சங்கத் தலைவரான அகில் கோயின் உதவியாளரான பிட்டு சோனாவால் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியபோது பொலிசார் அவர் மீது மீண்டும் வழக்கு போட்டுள்ளனர். அதாவது அவர் தன் முகநூலில் லெனின் படத்தை போட்டு தோழர் என்று எழுதியுள்ளமையை குற்றமாக வழக்கு பதிவு செய்துள்ளனர் பொலிசார். “தோழர்” என்ற சொல்லையே இந்திய அரசால் ஜீரணிக்க முடியவில்லை. வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு அந்த ஒரு சொல்லே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் தோழர் விவேக் என்பவர் ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இனி மக்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே வாய் திறக்க வேண்டும் போல் இருக்கிறது. Image may contain: 1 person

No comments:

Post a Comment