Monday, June 29, 2020

•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல் !

•அடிமையாக வீழ்ந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவது மேல் ! இரண்டு கொலைகள். இரண்டும் பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது . ஒன்று அமெரிக்காவில் அமெரிக்க பொலிசாரால் நடத்தப்பட்டிருக்கிறது. மற்றது இலங்கையில் கொக்குவிலில் இலங்கை பொலிசாhhல் நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் கொல்லப்பட்டவர் கறுப்பு இனத்தவர். அவரின் பெயர் ஜோர்ஜ் பிளைட் இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் இருவர் (20.10.2016) அவர்கள் தமிழர்கள் . அவர்கள் மாணவர்கள். அவர்களின் பெயர் சுலக்சன் மற்றும் கஜன். அமெரிக்காவில் நடந்தது நிற ஒடுக்குமுறை என்றும் அதற்கு எதிராக அமெரிக்காவில் மட்டுமன்றி ஜரோப்பாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இலங்கையில் தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டது இன ஒடுக்குமுறை என்று கூறுவதற்கோ அல்லது அவர்களுக்கு நீதி பெறுவதற்காக போராடுவதற்கோ தமிழ் தலைவர்கள் இன்றுவரை தயாராக இல்லை. கறுப்பு இனத்தவரான ஒபாமா அமெரிக்க அரசின் இக் கொலையைக் கண்டித்ததோடு தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார். இத்தனைக்கும் அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால் தமிழ் தலைவர் சுமந்திரன் தமிழ் மாணவர்களை கொலை செய்தவர்களை நல்லாட்சியினர் என்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ தனக்கு கிடைத்தது பெரும் பாக்கியம் என்றும் கூறுகிறார். அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர்கள் சிறுபான்மையினர். ஆயினும் அவர்கள் தமது ஒடுக்கு முறைக்கு எதிராக துணிந்து போராடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் பொலிசார் முன்னிலையிலேயே அமெரிக்க தேசியக்கொடியை தீயிட்டு கொளுத்துகிறார்கள். ஆனால் எமது தலைவர் சம்பந்தர் ஜயா இலங்கை தேசியக்கொடியை அவமதிக்கக்கூடாது என்றும் சிங்கள மக்களுக்கு கோபம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார். கறுப்பு இன மக்களின் நிற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க வெள்ளை இன மக்களின் ஆதரவு மட்டுமன்றி சர்வதேச ஆதரவும் கிடைத்து வருகிறது. ஆனால் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு இன்னும் இத்தகைய ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? குறிப்பு - கறுப்பு இன மக்களின் போராட்டத்தை சுமந்திரன் ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது அதையும் வன்முறை என்றும் தன்னால் ஒருபோதும் எற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்போகிறாரா? Image may contain: one or more people and outdoor Image may contain: 2 people, selfie Image may contain: 1 person Image may contain: 1 person

No comments:

Post a Comment