Monday, June 29, 2020

ஒரு குரல் - ஜயோ! கழுத்தை நெரிக்கிறார்கள். என்னால் சுவாசிக்க முடியவில்லை.

ஒரு குரல் - ஜயோ! கழுத்தை நெரிக்கிறார்கள். என்னால் சுவாசிக்க முடியவில்லை. மிஸ்டர் எக்ஸ் - உன் கழுத்தை நெரித்து கொல்பவர் இலங்கை பொலிசா? ஒரு குரல் - இல்லை மிஸ்டர் எக்ஸ் - உன் கழுத்தை நெரித்து கொல்பவருக்கு இந்திய அரசு உதவி செய்கிறதா? ஒரு குரல் - இல்லை மிஸ்டர் எக்ஸ் - நீ ஒரு ஈழத் தமிழனா? ஒரு குரல் - இல்லை மிஸ்டர் எக்ஸ் - உன் பெயர் சுலக்சன் அல்லது கஜனா? ஒரு குரல் - இல்லை. மிஸ்டர் எக்ஸ் - அப்ப நீ யாரு? ஒரு குரல் - நான் ஜோர்ஜ் பிளைட். என்னை அமெரிக்க பொலிஸ் கழுத்தை நெரித்து கொல்கிறது. மிஸ்டர் எக்ஸ் - அப்படியா? இப்ப பாரு, “அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!” “அமெரிக்க நிற ஒடுக்குமுறை ஒழிக” “ஓயமாட்டோம் ஓயமாட்டோம் கறுப்பு இனத்தவருக்கு நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம்.” மிஸ்டர் எக்ஸ் - பார்த்தாயா உனக்காக எப்படி குரல் கொடுத்துள்ளேன் என்று. ஒரு குரல் - எங்கே ஒருக்கால் உன் மூஞ்சியைக் காட்டு. த்தூ... செருப்பால அடி வாங்கிறத்துக்குள்ளே ஓடிப் போயிடு. குறிப்பு - இந்த மிஸ்டர் எக்ஸ் என்ற இடத்தில் தமிழ் தலைவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள், தமிழ் மனதவுரிமைவாதிகள் யார் பெயரையும் பொருத்திப் பாருங்கள். யாவும் சரியாகவே பொருந்தும். Image may contain: one or more people, people standing and outdoor, text that says "APOUS"

No comments:

Post a Comment