Monday, June 29, 2020

தியாகி சிவகுமாரனும்

•தியாகி சிவகுமாரனும் தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டமும்! தியாகி சிவகுமாரன் இட ஒதுக்கீட்டு எதிரானவராமே என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் என்னிடம் கேட்கிறார். அவர் இவ்வாறு கேட்டது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஏனெனில் இன்றைய ஈழத் தமிழர் பலருக்கே தியாகி சிவகுமாரன் பற்றி தெரியவில்லையே. இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்குவது. அத்தகைய சாதீய ஒதுக்கீடு எதுவும் இலங்கையில் இல்லை. இலங்கையில் இருப்பது தரப்படுத்தல். அதாவது பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்பதற்கு வழங்கப்படுவது. ஆரம்பத்தில் தரப்படுத்தல் என்பது இன ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது சிங்கள மாணவன் குறைந்த புள்ளியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவான். ஆனால் தமிழ் மாணவன் கூடிய புள்ளிகள் எடுத்தாலும் வாய்ப்பு பெறுவது கஸ்டமாக இருந்தது. அதனால் தமிழ் மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதற்கு எதிராக சிவகுமாரன் உட்பட தமிழ் மாணவர்கள் பாரிய போராட்டங்களை மேற்கொண்டனர். அதன்பின்பே இலங்கை அரசு மாவட்ட ரீதியான தரப்படுத்தலைக் கொண்டு வந்தது. இதுவே இப்பவும் நடைமுறையில் இருந்து வருகிறது. சிவகுமாரன் விரும்பியிருந்தால் வெளிநாடு சென்று உயர் கல்வியும் வசதியான வாழ்வும் பெற்றிருக்க முடியும். அதற்கான வாய்ப்பும் வசதியும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடினார். அதனால் அவர் சிறை மற்றும் சித்திரவதைகளை அனுபவித்தார். அவர் உயிர் பிரியும் அந்த அந்த இறுதி நேரத்திலும் தான் மீண்டும் பிறக்க விரும்புவதாகவும் பிறந்து தமிழ் இனத்திற்காக போராட விரும்புவதாகவும் கூறினார். ஆனால் சிவகுமாரன் போன்றவர்களை போராடத் தூண்டிய தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். அதுவும் தலைவர் அமிர்தலிங்கம் தன் மகனுக்கு மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்று படிக்க வைத்தார். அந்த மகன் டாக்டருக்கு படித்துக்கொண்டே TENA என்ற இயக்கத்தை நடத்தினார். இந்திரா காந்தியிடம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதமோ பயிற்சியோ வழங்க வேண்டாம் என்று கூறிய அமிர்தலிங்கம் தன் மகன் ஆயத இயக்கம் நடத்தியதை தடுக்கவில்லை. தன் படிப்பை நிறுத்தாத அமிர்தலிங்கத்தின் மகன் தமிழ் இளைஞர்களை படிப்பை கைவிட்டிட்டு தன் இயக்கத்திற்கு வரும்படி அழைத்தார். அமிர்தலிங்கத்தின் மகனுக்கு நாட்டில் இருந்து இளைஞர்களை பிடித்து அனுப்பியவர் மாவை சேனாதிராசா. ஆனால் மாவை சேனாதிராசா தன் பிள்ளைகளை ஒருபோதும் போராட்டத்திற்கு அனுபியதில்லை. அவ்வேளையில் அமிர்தலிங்கத்தின் மகனின் கடிதம் ஒன்றைக் கொண்டுவந்த அவரது உறவினர் ஒருவர் தள்ளாடி ராணுவ முகாமில் கைது செய்யப்பட்டார். உடனே அமிர்தலிங்கம் தொலைபேசியில் ஜனாதிபதி ஜெயவர்தனாவுடன் தொடர்பு கொண்டு அந்த இளைஞரை விடுவித்தார். அதேவேளை பல தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கு அவர் பேசவில்லை. இப்படிப்பட்டவர்கள் இனத்திற்காக போரடியவர்களை வன்முறையாளர்கள் என்றும் தங்களை தியாகிகள் என்றும் இப்போது கூறுகின்றனர். என்னே கொடுமை இது? Image may contain: 1 person, text

No comments:

Post a Comment