Monday, June 29, 2020

•கூட்டமைப்பின் தேர்தல் வியூகம்!

•கூட்டமைப்பின் தேர்தல் வியூகம்! மாவை சேனாதிராசா - ஜயா! சொன்னால் கேளுங்கள். இந்தமுறை அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. வேறு ஏதாவது புதிசாக சொல்ல வேண்டும். சுமந்திரன் - ஆம் ஜயா! போறபோக்கைப் பார்த்தால் இம்முறை என்னை தோற்கடித்துவிடுவாங்களோ என்று பயமாய் இருக்கு. ஏதாவது செய்யனும் ஜயா. சம்பந்தர் - இந்த கருமத்திற்குதானே வாயை மூடிட்டு சும்மாய் இரும் என்ற எத்தனை தடவை சொன்னேன். கேட்டீரா? சுமந்திரன் - அதுதான் தேர்தலை தள்ளிப்போட வழக்குப் போட்டுப் பார்த்தன். அதுவும் சரிவரவில்லை ஜயா. மாவை சேனாதிராசா - இந்தியன் எம்பசி தந்த காசு இருக்குதானே ஜயா. அதில சாராயம் வாங்கி மக்களுக்கு கொடுத்துப் பார்த்தால் என்ன ஜயா? சம்பந்தர் - தம்பி மாவை! தமிழ்நாட்டு; மக்கள் கைநீட்டி வாங்கினால் விசுவாசமாக வோட்டு போடுவார்கள். ஆனால் ஈழத் தமிழர் விபரமானவர்கள். வாங்கி குடித்துவிட்டு தனக்கு விருப்பமானவர்களுக்குதான் போடுவார்கள். சுமந்திரன் - அப்ப என்னதான் செய்வது ஜயா? என்னை நம்பி அம்பிகாவும் வேலையை ராஜினாமா செய்திட்டுது. எப்படியாவது எம்.பி யாக்கிறதா அவவுக்கு வாக்கு கொடுத்திட்டன். சம்பந்தர் - புரியுது. புரியுது. உமக்கு மட்டுமா எனக்குகூட பிரச்சனைதான். இந்த லெக்சனில் வெல்லவில்லை என்றால் எப்படியும் சொகுசு பங்களாவை பறித்திடுவாங்கள். அப்புறம் இந்த வயசில நான் எங்கேபோய் தங்குவது? சுமந்திரன் - ஆமா ஜயா. நானும் வெல்லவில்லை என்றால் எனது அதிரடிப்படை பொலிஸ் பாதுகாப்பை நீக்கிவிடுவாங்கள். அப்புறம் போறவன் வாறவன் எல்லாம் செருப்பால் அடிப்பானே? சம்பந்தர் - சரி. சரி. கவலைப்படாதையுங்கோ. நான் போய் இந்திய தூதரின் காலில் விழுகிறேன். அவர் ஏதாவது ஜடியா தருவார்தானே? (தொடரும்) Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment