Thursday, November 30, 2017

காலம் கனிந்தது பேரம் படிந்தது 2ஜி கோவிந்தா ஆனது?

•காலம் கனிந்தது
பேரம் படிந்தது
2ஜி கோவிந்தா ஆனது?
பல நாட்களாக தள்ளிவைக்கப்பட்ட 2 ஜி ஊழல் வழக்கு தீர்ப்பு நாளை வழங்கப்படவிருக்கிறது.
இத்தனை நாளும் திமுக வின் கரங்கள் ஊழல் கறை படிந்தவை என்று சொல்லிவந்த பிரதமர் மோடி, வீடு தேடிச்சென்று கலைஞர் கருணாநிதியின் கரங்களை பற்றியுள்ளார்.
மதவெறி பிடித்த மோடியை எதிர்ப்போம் என்று ஜக்கிய முன்னணி கட்டிவந்த திமுக வும் வேறு வழியின்றி மோடியை வரவேற்றுள்ளது.
நடக்கும் நாடகங்களைப் பார்க்கும்போது 2ஜி ஊழல் வழக்கில் பேரம் படிந்துவிட்டது. திமுக வுக்கு சாதகமான தீர்ப்பு எழுதப்படுகிறது என்றே தோன்றுகிறது.
இப்போது உள்ள கேள்வி தீர்ப்பு நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட போகிறதா அல்லது திமுக நிரபராதி என கூறப்படப்போகிறதா என்பதே.
திமுக, அதிமுக இரண்டின் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் இருக்கின்றன. அதனை காட்டி மோடி அரசு மிரட்டுகிறது.
இதனால் மோடி அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத நிலையில் தமிழக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் அவர் அதை நிறைவேற்றவில்லை.
வாக்குறுதி வழங்கி ஏமாற்றியது தொடர்பாக மோடியிடம் கேட்கப்போவதாக மாணவி நந்தினி அறிவித்ததும் அவரையும் அவரது தந்தையும் பொலிஸ் கைது செய்துள்ளது.
ஒரு ஜனநாயகநாட்டில் பிரதமர் பொய் கூறலாம். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் ஏன் பொய் கூறினீர்கள் என்று ஒரு மாணவி கேட்க முடியாது. இது என்ன ஜனநாயகம்?
கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து இறந்துள்ளது. அதனை தடுக்க வக்கில்லை.
ஆனால் அது குறித்து காhட்டூன் வரைந்தவரை கைது செய்துள்ளது பொலிஸ். இதுதான் கந்துவட்டியை ஒழிக்கும் நடவடிக்கையா?
நள்ளிரவில் வழக்கறிஞர் செம்மணி வீட்டில் புகுந்து அவரை இழுத்துச் சென்று அடித்து காலை முறித்திருக்கிறது பொலிஸ்.
தமிழகத்தில் ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?
இந்தியாவில் இந்துவெறி காணப்படுவதாக நடிகர் கமலகாசன் கூறியதும் அவரை வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
ஒரு நாடறிந்த நடிகருக்கே இந்த நிலை என்றால் இனி சாதாரண மக்களால் வாய் திறந்து கருத்து கூறமுடியுமா?
இந்த சர்வாதிகார நிலை குறித்து தமிழக ஊழல் கட்சிகளால் எதிர்க்க முடியவில்லை.
எனவே ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment