Thursday, November 30, 2017

சம்பந்தர் அய்யா 700 கோடி ரூபா லஞ்சம் பெற்றாரா?

•சம்பந்தர் அய்யா 700 கோடி ரூபா லஞ்சம் பெற்றாரா?
•கௌதமன் அதற்கான ஆதாரத்தை முன்வைப்பாரா?
சம்பந்தர் அய்யா இலங்கை அரசிடமிருந்து 700 கோடி ரூபா லஞ்சம் பெற்றுள்ளார் என்று கௌதமன் தெரிவித்துள்ளார்.
கௌதமன் சிpறந்த இன உணர்வாளர். அவர் ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அவர் இதுவரை யாருமே கூறாத குற்றச்சாட்டை சம்பந்தர் அய்யா மீது சுமத்தியுள்ளார்.
இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இலங்கை அரசியல் வரலாற்றில் 700 கோடி ரூபா என்பது மிகப் பெரிய தொகையாகும்.
எனவே இதற்கான ஆதாரத்தை மக்கள் முன் வைக்க வேண்டியது கௌதமனின் கடமையாகும்.
சம்பந்தர் அய்யா “பதவி பெற்றார், சொகுசு பங்களா பெற்றார், சொகுசு வாகனம் பெற்றார், டில்லியில் மருத்துவ சிகிச்சை பெற்றார்” என்றுதான் இதுவரை கூறப்பட்டு வந்தது. அதற்கான ஆதாரங்களும் மக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் சம்பந்தர் அய்யா லஞ்சமாக பணம் பெற்றார் அதுவும் 700 கோடி ரூபாவினைப் பெற்றார் என்று இதுவரை யாருமே குற்றம் சாட்டியதில்லை.
முதன்முதலாக அதுவும் தமிழகத்தில் இருந்து கௌதமன் அவர்கள் இதனைக் கூறியுள்ளார்.
எனவே இதற்கான ஆதாரத்தை கௌதமன் அவர்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment