Thursday, November 30, 2017

போஸ்னியா மக்களுக்கு ஒரு நியாயம் தமிழ் மக்களுக்கு இன்னொரு நியாயம்

•போஸ்னியா மக்களுக்கு ஒரு நியாயம்
தமிழ் மக்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதானா ஜ.நா மன்றத்தின் நியாயம்?
முன்னாள் செர்பிய இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற போஸ்னிய போரின்போது இனப்படுகொலை குற்றங்கள் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள த ஹேக்கிலுள்ள ஐநா தீர்ப்பாயம் ஒன்று, மனித குலம் அறிந்திருக்கும் மிக கொடிய குற்றங்களின் பட்டியலில் இவருடைய குற்றங்கள் இடம்பெறுவதாக கூறியுள்ளது.
7 ஆயிரம் போஸ்னிய முஸ்லிம் ஆண்களும், சிறுவர்களும் சிரெப்ரெனிகாவில் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு மிலாடிச் பொறுப்பு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆனால் அதேவேளை 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஜ.நா வினாலே கூறப்பட்டிருந்தும் இன்னும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை.
போஸ்னியாவில் 7 அயிரம் பேர் கொல்லப்பட்டதை இனப் படுகொலையாக ஏற்றுக்கொள்ளும் ஜ.நா மன்றம், இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் அதனை வெறும் போர்க் குற்றமாகவே கருதுகிறது.
போர்க்குற்ற விசாரணையைக்கூட நடத்த இலங்கை அரசு மறுக்கிறது. அதுமட்டுமல்ல எந்தவொரு ராணுவ வுPரனையும் நீதிமன்றத்தில் நிறுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறுகிறது.
ஆனால் செர்பிய ராணுவ தளபதியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய ஜ.நா மன்றம் தமிழ் மக்கள் விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசுக்கு துணை போகிறது.
ஏன் இந்த நிலை?
(1) இலங்கை நாடு போஸ்னியா போன்று ஜரோப்பா கண்டத்தில் இல்லாமல் ஆசியாக் கண்டத்தில் இருப்பதால்தானா கவனிக்கப்படவில்லை? அல்லது,
(2) இந்திய அரசை மீறி இலங்கை தமிழர்களுக்கு உதவ வல்லரசு நாடுகள் விரும்பவில்லையா? அதாவது,
(3) இலங்கை என்னும் சிறிய சந்தைக்காக இந்தியா என்னும் பெரிய சந்தையை இழக்க ஏகாதிபத்தியங்கள் விரும்பவில்லையா? அல்லது,
(4) இலங்கையில் பெற்றேலிய எண்ணெய்வளம் இல்லாதபடியால்தான் வல்லரசு நாடுகள் இலங்கை பிரச்சனையில் தலையிட விரும்பவில்லையா?
இவை எல்லாமே காரணமாக இருந்தாலும் மிக முக்கிய காரணம்
•நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறுவதற்கு சுமந்திரன்கள் போஸ்னியாவில் இல்லை.
•சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்ளக விசாரணை போதும். அதுவும் இப்போதைக்கு தேவையில்லை என்று கால அவகாசம் எடுத்துக் கொடுக்க சம்பந்தர் அய்யாக்கள் போஸ்னியாவில் இல்லை.

No comments:

Post a Comment