Thursday, November 30, 2017

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை.

-தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லை.
அதனாலேயே இந்திய அரசு அவர்கள்மீது சூடு நடத்துகிறது!
ராமேஸ்வரம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு அவர்கள் என்ன பயங்கரவாதிகளா அல்லது அவர்கள் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தார்களா?
எல்லைதாண்டி வரும் எதிரி நாடான பாகிஸ்தான் மீனவர்கள் மீதுகூட இந்திய கடற்படை துப்பாக்கிசூடு நடத்துவதில்லை.
ஆனால் தனது சொந்த நாட்டு தமிழக மீனவர்கள் மீது என் இந்திய கடலோரக் காவற்படை துப்பாக்கிசூடு நடத்துகிறது?
தமிழக மீனவர்களை இந்தியர்களாக அரசு கருதவில்லையா? அவர்களுடைய இழப்பு குறித்து அதற்கு அக்கறை இல்லையா?
இதுவரை 600க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும் என பா.ஜ.க கட்சியினர் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால் கடந்த வாரம் இந்திய கடற்படை இலங்கைக்கு விஜயம் செய்து தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபா பெறுமதியான யுத்தக் கப்பல் ஒன்றையும் இந்திய அரசு கடந்த மாதம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
தமிழக மக்கள் ஆண்டுதோறும் 86 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக இந்திய அரசுக்கு செலுத்துகிறார்கள்.
ஆனால் தமிழக மக்களின் வெள்ளநிவாரணத்திற்கு பணம் இல்லை என்று மத்திய அரசு கைவிரிக்கிறது.
அதேநேரத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பலை வழங்குகிறது.
தமிழக மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
இந்திய அரசு தமிழர்களை ஒருபோதும் இந்தியர்களாக கருதுவதில்லை என்பதையே தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிசூடு காட்டுகிறது.

No comments:

Post a Comment