Thursday, November 30, 2017

கேள்வி- போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது

கேள்வி-
போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது
மாவீரர்களுக்கு லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா?
பதில்- 
நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால்,
இதே லண்டனில் ஈஸ்ட்காமில் 4 கோயில்கள் அருகருகே பல மில்லியன் ரூபாவில் கட்டும்போது இது தேவையா என்று கேள்வி கேட்காதவர்கள் ஒக்ஸட்போட் நகரில் மாவீரர்களுக்கு பணிமனை கட்டும்போது ஏன் கேட்கின்றனர்?
இதே லண்டனில் O2அரினா மண்டபத்தில் ARரகுமான் கச்சேரி நடக்கும்போது கேள்வி கேட்காதவர்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஏன் கேட்கிறார்கள்?
வெம்பிளி அரினாவில் மானாட மயிலாட நடந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள் அதே வெம்பிளி அரினாவில் மாவீரர் நினைவு கூரும்போது ஏன் கேட்கிறார்கள்?
ஈலிங் அம்மன் ரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த போது ஏன் இந்த வீண் செலவு என்று கேட்காதவர்கள் மாவீரருக்கு பூ வும் விளக்கும் வைக்கும்போது ஏன் கேட்கின்றனர்?
நாய்க்கு ஜயர் பிடித்து செத்த வீடு நடத்தும்போதும் கெலிகப்டர் பிடித்து சாமத்திய சடங்கு நடத்தும்போதும் கேள்வி எழுப்பாமல் மௌனமாக இருந்தவர்கள் மாவீரர் நினைவு கூரும்போது மட்டும் ஏன் கேள்வி கேட்கின்றனர்?
கேள்வி-
இத்தனையும் கேட்டவர்கள்தான் காயம்பட்ட போராளிகளுக்காக கேள்வி கேட்க முடியுமா?
பதில்-
இல்லை. ஆனால் இவர்கள் உண்மையில் காயம்பட்ட போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் இத்தனையும் கேட்டிருப்பார்கள்.
இத்தனை குறுகிய காலத்திற்குள் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் பங்களிப்புமே
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் போராட்டத்தை முன் நகர்த்துகின்றனர் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தம் உறவுகளை தாங்கிப் பிடிக்கின்றனர்.
"ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்
நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்து செல்.
ஆனால் ஒருபோதும் உன் இயக்கத்தை நிறுத்திவிடாதே!"
இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் கோசம்!

No comments:

Post a Comment