தமிழக மீனவன் இந்திய கடற்படையால் சுடப்படுகிறான்
நாம் நயன்தாராவை “தோழர்” என்று அழைக்கலாமா என விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்
நாம் நயன்தாராவை “தோழர்” என்று அழைக்கலாமா என விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்
தமிழக மீனவன் தமிழில் பேசியதற்காக இந்திய படையால் தாக்கப்படுகிறான்
நாம் ஜோதிகா “தேவடியா பயலே” என்று பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஜோதிகா “தேவடியா பயலே” என்று பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
காஸ்மீர் மக்களை இந்திய படைகள் ரப்பர் குண்டுகளால் சுட்டபோது நாம் தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தோம்.
இன்று எம் மீனவனை இந்திய படைகள் ரப்பர் குண்டுகளால் சுட்டுவிட்டு பாரத் மாதாகிகே ஜே என்கிறார்கள்.
இன்று எம் மீனவனை இந்திய படைகள் ரப்பர் குண்டுகளால் சுட்டுவிட்டு பாரத் மாதாகிகே ஜே என்கிறார்கள்.
கேரளாவில் இத்தாலி கப்பல்காரன் மலையாள மீனவனை சுட்டபோது சோனியா காந்தியையும் மீறி கைது செய்ய முடிந்தது கேரள அரசால்.
இத்தனைக்கும் கேரளாவில் மலையாள மக்களின் தொகை 3.5 கோடி மட்டுமே. அவர்களின் களின் எண்ணிக்கை 20 மட்டுமே
ஆனாலும் அவர்களால் இந்திய மத்திய அரசை துணிவுடன் எதிர்க்க முடிகிறது. அங்கு இந்திய மத்திய அரசு வாலாட்ட முடியாது.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் தொகை சுமார் 7 கோடி. களின் எண்ணிக்கை 38.
இருந்தும்,
தமிழ்நாட்டில் தமிழ் மீனவன் தமிழில் பேசினால் தாக்கப்படுகிறான்
தமிழ் கள் தமிழில் பேசினால் “அரக்கர்கள்” என்று கூச்சல் போடுகிறார்கள்.
தமிழ் மாணவன் தமிழ் பேசினால் அபராதம் போடுகிறார்கள்.
இத்தனையும் செய்துவிட்டு தியேட்டரில் தேசிய கீதம் போடும்போது எமுந்து நிற்கவில்லை என்றால் கேஸ் போடுகிறார்கள்.
ஏன் இந்த நிலை?
தமிழ் தலைவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகளாக இருப்பதால் மத்திய அரசை எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள்.
தமிழ்தலைவர்கள் எல்லாம் தமது பதவி நலன்மீது அக்கறை கொள்கிறார்களேயொழிய மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை.
கர்நாடகாவில் ரயில்நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை கர்நாடக அரசே அழிக்கிறது.
கர்நாடகாவில் வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் கன்னடம் படித்திருக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவு போடுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காக குரல் கொடுப்போரை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது.
அதுமட்டுமா சிலர் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழ் மூலம் பிழைப்பு நடத்திக்கொண்டே இந்தி படியுங்கள் என்று தைரியமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களால் கேரளா சென்று மலையாளத்திற்கு எதிராக பேச முடியுமா? அல்லது கர்நாடகா சென்று கன்னடத்திற்கு எதிராக பேச முடியுமா?
தமிழா இன உணர்வு கொள்!
No comments:
Post a Comment