Thursday, November 30, 2017

ஜனாதிபதியால் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் வேறு வழியின்றி போராட்டத்தை தொடர்கிறார்கள்

ஜனாதிபதியால் ஏமாற்றப்பட்ட மாணவர்கள்
வேறு வழியின்றி போராட்டத்தை தொடர்கிறார்கள்
மாணவர்களின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.
அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மாணவர்களிடம் உறுதியளித்த ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.
மாணவர்களை ஏமாற்றியது மட்டுமன்றி தற்போது போராடும் மாணவர்களை தனிமைப்படுத்தி பழி வாங்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.
மாணவர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழ்தேசியகூட்டமைப்பு திரைமறைவில் அரசுடன் சேர்ந்து சதி செய்கிறது.
யாழ் வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாணவர்களை சந்திக்க மறுத்ததோடு மாணவர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
தமது நலன்களை சாதிப்பதற்கு ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் சம்பந்தர் அய்யா அரசியல் கைதிகள் விடயத்தில் கடிதம் எழுதி ஏமாற்றுகிறார்.
பிரதமர் ரணில் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நுங்கு வெட்டிக் கொடுத்த சுமந்திரன், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்காக பிரதமரை அழைத்து செல்ல விரும்பவில்லை.
நீதி அமைச்சர் அத்துக்கோரளையுடன் ரஸ்சியா சென்ற மாவை சேனாதிராசா அவர்களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக அவருடன் ஒரு இரண்டு நிமிடம் பேச தோன்றவில்லை.
மாணவி வித்யா கொலையாளி சுவிஸ்குமாரை காப்பாற்ற நள்ளிரவிலும் ஓடோடிச் சென்ற அமைச்சர் விஜயகலா 35 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை சென்று சந்திக்கவில்லை.
பிரதமரையும் ஜனாதிபதியையும் அழைத்து தனது மகளின் நாட்டிய அரங்கேற்றத்தை நடத்த முடிந்த அமைச்சர் விஜயகலாவால் அரசியல் கைதிகளுக்காக அவர்களை அழைக்க விரும்பவில்லை.
தமிழ் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் வேறு வழியின்றி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இப்போது போராடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வேலைகளில் பல்கலைக்கழக உபவேந்தர் ஈடுபடுகிறார்.
ஒருபுறம் அரசியல் கைதிகள் மரணத்தின் விழிம்பில் நிற்கிறார்கள். மறுபுறம் போராடும் மாணவர்கள் சீரழிக்கப்படும் அபாயம். இதற்கு மத்தியில் தமிழ் மக்கள் நலனில் அக்கறையற்ற தலைவர்கள்.
மாணவர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி அகிம்சை வழியில் போராடுகிறார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கும் யாழ் இந்திய தூதரோ இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.
ஒருவேளை உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி மரணமடைந்தால் அந்த இடத்தில் காந்தி சிலை நிறுவுதற்கு இந்த தூதர் காத்துக்கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை.
இந்திய தூதர் பேசாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு ஒரு செய்தி அனுப்பியுள்ளது.
இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இரண்டு இந்திய போர்க்கப்பல்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.
.

No comments:

Post a Comment