Thursday, November 30, 2017

தோழர் பாரதிநாதன் அவர்கள் (Bharathi Nathan ) “ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
தமிழ்நாடு சென்னையில் இருக்கும் தோழர் பாரதிநாதன் அவர்கள் (Bharathi Nathan ) “ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தோழர் பாரதிநாதன் மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையில் செயற்படுபவர். அவர் தறி, வந்தேறிகள், ஆட்காட்டி, கம்யுனிசம்- ஓர் எளிய அறிமுகம் என பல நூல்களை எழுதியுள்ளார்.
எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள தோழர் பாரதிநாதன் அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,
தோழர் பாலன் எழுதிய ‘ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’ என்ற நூலைப் படித்தேன்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் மக்கள் யுத்தக் கட்சியில் பணி புரிந்த போது ஏற்பட்ட சில நிகழ்வுகளாய் மனதில் கொண்டு வந்து நிறுத்தியது இந்தப் புத்தகம்.
ஈழத்தில், ஆயுதப் போராட்டம் துவங்கி நடந்துக் கொண்டிருந்த அதே காலக் கட்டத்தில், தமிழகத்திலும் தனித் தமிழ்நாடு கோரிக்கை தோழர் தமிழரசனாய் முன் வைக்கப்பட்டது.
எந்தவொரு பிற்போக்கு அரசும் தேசிய இனப் பிரச்னையை ஆதரிக்காது. ஆயுத முனையில் நசுக்கவே செய்யும். இது உலகளாவிய வரலாறு.
உலகம் எப்போது அழுகிய முதலாளித்துவமான ஏகாதிபத்திய காலக் கட்டத்தில் நுழைந்ததோ அப்போதே தற்கால தேசிய இனப் பிரச்னை என்பது வல்லாதிக்க நாடுகளின் கைப் பிடிக்குள்ளேயே இருக்கிறது.
எங்கெல்லாம் தேசிய இன உரிமைக் குரல்கள் எழுகிறதோ? அங்கெல்லாம் அவை ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலின் பேரில் சொந்த நாட்டு அரசுகளால் நசுக்கப்பட்டே வருகிறது. அதற்கு, ஈழமும், தமிழ்நாடும் விதி விலக்கல்ல.
ஏகாதிபத்தியக் காலக் கட்டத்தின் மார்க்சியம் லெனினியமே.
தோழர் லெனின் எந்த ஒரு தேசிய இனப் போராட்டமும் பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்த கோட்பாட்டு அடிப்படையில் நடத்தலே சிறப்பு என்றார்.
தோழர் தமிழரசன் தனது தனித் தமிழ்நாட்டு கோரிக்கைக்கு மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையையே வழி காட்டியாய் கொண்டதாய் அறிவித்தார்.
அவரது பெண்ணாடம் மற்றும் மீன்சுருட்டி அறிக்கைகளில் அதைக் காணலாம்.
தோழர் பாலன் தனது புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்டதற்கு பின்னால் எப்படி ஏகாதிபத்திய நலன் நாடும் சிங்கள பேரின வாத அரசு இருந்ததோ, தோழர் தமிழரசன் பொன்பரப்பியில் கொல்லப்பட்டதற்கு ஏகாதிபத்திய அடிவருடும் இந்திய அரசும் இருந்தது.
இன ஒடுக்குமுறைகள் இரு நாடுகளிலும் தொடர்கின்றன.
தோழர் பாலன் இந்த பார்வையில் தான் தனது ‘ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’ என்ற இந்த நூலை எழுதியிருக்கிறார்.
அதற்காக என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

No comments:

Post a Comment