Thursday, November 30, 2017

இவர்கள் தேடுவது தமது உறவுகளின் பெயர்களை அல்ல

இவர்கள் தேடுவது
தமது உறவுகளின் பெயர்களை அல்ல
இவர்கள் தேடுவது
தமது உறவுகளின் வேர்களையே!
கல்லறைகளை உடைக்கலாம்- ஆனால்
இவர்களின் நெஞ்சுறுதியை உடைக்க முடியுமா?
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
காலம் மாறும்
இவர்கள் தமக்குரிய நியாயம் கேட்பார்கள்
இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு
ஓய்ந்து விடப் போகிறவர்கள் அல்லர்!

No comments:

Post a Comment