Thursday, November 30, 2017

சுமந்திரனின் விவாதத்திற்கான அழைப்பை

•சுமந்திரனின் விவாதத்திற்கான அழைப்பை
சுரேசும் கஜேந்திரகுமாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!
உத்தேச அரசியல் யாப்பானது தமிழ்மக்களுக்கு பெரும் தீங்கானது என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூறி வருகிறார்கள்.
ஆனால் அது தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வு என்று சுமந்திரன் கூறுவதோடு அது குறித்து விவாதம் செய்ய பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் நலன் கருதி சுமந்திரனின் இந்த விவாத அழைப்பை எவ்வித நிபந்தனையும் இன்றி சுரேசும் கஜேந்திரகுமாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் நேரிடையாக கலந்துகொண்டு விவாதம் செய்வது அமெரிக்கா லண்டன் போன்ற நாடுகளில் வழமையானது.
இலங்கையில்கூட முன்னர் தோழர் சண்முகதாசன் செந்தில்வேல் போன்றவர்கள் தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவர்களுடன் நேரடி விவாதங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
எனவே மீண்டும் தமிழர் மத்தியில் இவ்வாறான நேரடி விவாதங்கள் நடைபெறுவது சிறந்தது. ஆரோக்கியமானது.
எதாவது ஒரு தொலைக்காட்சி இவ் விவாதத்தினை நிகழ்த்த முன்வரலாம். யாராவது ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையில் இதனை அவர்கள் நடத்தலாம்.
இதனை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் காண்பதினூடாக அரசியல் யாப்பு குறித்து தெளிவு பெறலாம்.
அதுமட்டுமல்ல சுமந்திரன், சுரேஸ், கஜேந்திரகுமார் இவர்களில் யார் என்ன பொய் சொல்கிறார்கள் என்பதையும் தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
எனவே கால தாமதம் இன்றி இவ் நேரடி விவாதம் நடைபெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு- மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் இவ் விவாதத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கதே.

No comments:

Post a Comment