Thursday, November 30, 2017

•தலைவர்களை விலைக்கு வாங்கலாம்

•தலைவர்களை விலைக்கு வாங்கலாம்- ஆனால்
தம்மை ஒருபோதும் வாங்கமுடியாது என்பதை
இந்திய தூதருக்கு நிரூபித்த தமிழ் மக்கள்!
தலைவர்களை விலைக்கு வாங்கினால் தமிழ் மக்களை வாங்கிவிடலாம் என இந்திய தூதர் நினைத்தார்.
ஆனால் தலைவர்களை வாங்கினாலும் தம்மை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை தமிழ் மக்கள் நிரூபித்து வருகிறார்கள்.
இதனால் இந்திய தூதர் வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலை வைக்கப்படும் என்றார்.
விவசாயிகளுக்கு 200 டிறைக்ரடர் வண்டி தரப்புடும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதற்குமேலாக வீடு கட்டித் தரப்படும் என்று உறுதி மொழி வழங்கியும் பார்த்தார்.
ஆனால் தமிழ் மக்கள் இந்திய ராணுவம் புரிந்த படுகொலைகளை மறக்கவும் முடியாது. மன்னிக்குவம் முடியாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்கள்.
இந்திய தூதரின் அனைத்து மிரட்டல்களையும் தாண்டி யாழ் மருத்துவமனைப் படுகொலைகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்தார்கள்.
அடுத்து 30 வருடத்திற்கு முன்னர் பட்டிருப்பில் இந்திய ராணுவம் செய்த படுகொலைகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து இந்திய தூதரின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்.
பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி தலைவருமான இராசமாணிக்கம் அவர்களின் மகன் உட்பட 11 பேரை இந்திய ராணுவம் படுகொலை செய்திருந்தது.
கிழக்குமாகாண தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்ட இந்த வைபவத்தில் தற்போதைய தமிழரசுக்கட்சி தலைவரோ அல்லது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ கலந்துகொள்ளவில்லை.
தற்போதைய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் குடும்பமும் வீடும் இந்தியாவில் சென்னையில் இருக்கின்றது.
அதனால் அவர் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வைபவங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
அற்ப சலுகைகளுக்காக தலைவர்கள் இந்திய தூதருக்கு விலை போகலாம். ஆனால் மக்கள் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்.
இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்ந்ததன் மூலம் கிழக்குமாகாண தமிழ் மக்களும் தம்மை விலைக்கு வாங்கமுடியாது என்பதை காட்டியுள்ளார்கள்.
வெகுவிரைவில் வடக்கு கிழக்கில் இருந்து இந்திய தூதர் மட்டுமன்றி இந்திய ஆக்கிரமிப்பும் விரட்டியடிக்கப்படும்.
இது உறுதி.

No comments:

Post a Comment