Friday, May 31, 2019

தமிழர் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்களோ அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தில் கரைய வேண்டுமா?

தமிழர் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்களோ
அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தில் கரைய வேண்டுமா?
அல்லது
தமக்கென தனித்த ஒரு கலாச்சாரத்தை கொண்டிருக்க வேண்டுமா?
என்பது பற்றி உரையாட வேண்டிய தருணம் இது.
தமிழர் தமக்கென ஒரு கலாச்சாரம் வேண்டு மெனில்
அது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும்
ஒருமித்து தீர்மானிக்க வேண்டும்.
காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழர்களை வழி நடத்த
ஒரு சிறந்த தலைமையும் தமிழருக்கு அவசியம்.
உலகின் மூத்த குடிகளில் தமிழரும்; ஒன்று
உலகில் எல்லோரும் தமது தாய் மொழிகளில் பேசுகின்றனர்
ஆனால் தமிழர்கள் மொழிகளின் தாய் மொழியில் பேசுகின்றனர்.
உலகில் எத்தனையோ இனங்களும் மொழிகளும் அழிந்துள்ளன.
ஆனால் தமிழ் நிலைத்து நிற்கின்றது என்றால் அது காலத்திற்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப வளைந்தும் வளர்ந்தும் வருவதால்தான்.
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று காரல் மார்க்ஸ் கூறினார்.
ஆனால் அதற்கு முன்னரே “யாதும் ஊரே யாரும் கேளீர்” என்று கூறியது தமிழ் இனமே.
அதுமட்டுமல்ல உலகில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் மற்றவரைக் காணும்போது “வணக்கம்” என்பார்கள் “நலமா” என்று கேட்பார்கள். ஆனால் தமிழர் மட்டுமே “சாப்பிட்டீங்களா” என்று கேட்கும் வழக்கமுடையவர்கள்.
முக்கியமாக வந்தாரை வாழ வைக்கும் இனம் என்ற பெருமையும் தமிழ் இனத்திற்கு மட்மே உண்டு.
இவ்வாறு பெருமை கொண்ட தமிழ் இனம் இனியும் தன்னை தக்க வைத்துக் கொள்ளும். வளர்த்துக் கொள்ளும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
தமிழ் இனி மெல்ல சாகாது!
குறிப்பு – ஒருவர் கீழே உள்ள படத்தை அனுப்பி என் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டார். அதற்கான பதிவே இது.

No comments:

Post a Comment