Friday, May 31, 2019

• சிறீயண்ணா உயிருடன் இருந்திருந்தால் இந்தியா உதவியிருக்குமா?

• சிறீயண்ணா உயிருடன் இருந்திருந்தால்
இந்தியா உதவியிருக்குமா?
• சகோதரப் படுகொலைகள் நடந்திருக்காவிடின்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
சிறீயண்ணா உயிருடன் இருந்திருந்தால் இந்தியா உதவியிருக்கும் என்றும் அவர் கொல்லப்பட்டிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் சிலர் கூற முற்படுகின்றனர்.
சிறீயண்ணாவுக்கு அஞ்சலி என்னும் பெயரில் சில இந்திய விசுவாசிகள் மீண்டும் 1983ம் ஆண்டு நிலைக்கு தமிழ் மக்களை கொண்டு செல்ல கனவு காண்கின்றனர்.
ஆனால் அவர்கள் எப்படித்தான் கனவு கண்டாலும் அல்லது தலை கீழாக நின்றாலும் இனி இந்தியாவை ஈழத் தமிழர்கள் நம்பப் போவதில்லை.
அந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு எமது நண்பன் அல்ல அது எம்மை அழிக்கும் எதிரி என்பதை தமிழ் மக்கள் இனம் கண்டு விட்டார்கள்.
1984ல் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இரு வெள்ளையினத்தவர்களை கடத்தினார்கள். சிறையில் இருக்கும் தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா கைதிகளை விடுதலை செய்து அந்த வெள்ளைக்காரர்களை காப்பாற்ற முன்வந்தார்.
ஆனால் அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தி உடனே சென்னையில் இருந்த பத்மநாபா மற்றும் முன்னனி தலைவர்களை இரகசியமாக கைது செய்து ஒரு ஓட்டலில் வைத்து உதைத்து அந்த வெள்ளைக்காரர்களை விடுதலை செய்ய வைத்தார். இது அப்போது அனைவரும் அறிந்த செய்தி.
இந்கு எமது கேள்வி என்னவெனில் யாரே இரு வெள்ளைக்காரர்களுக்காக நடவடிக்கை எடுத்த இந்திய அரசு தனது விசுவாசியான சிறீயண்ணாவை ஏன் காப்பாற்ற முயலவில்லை?
அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில்தானே இருந்தார். அவரை கைது செய்து மிரட்டியிருந்தால் சிறீயண்ணாவையும் அவரது போராளிகளையும் காப்பாற்றியிருக்கலாம்தானே?
அதுமட்டுமல்ல, டெலோ இயக்கத்திற்கு பின்பு இந்திய விசுவாச இயக்கங்களான ஈபிஅர்எல்எவ் மற்றும் ஈரோஸ் இயக்கங்களை தடை செய்தபோதும் இந்திய அரசு மௌனமாகத்தானே இருந்தது? ஏன் அதை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல சம்பிரதாயத்திற்காகக்கூட ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லையே?
உண்மையில் இந்திய அரசு தனது உளவுப்படை மூலம் இயக்கங்களுக்கிடையே மோதல்களை உருவாக்கியது. இயக்கங்கள் ஒன்றுக்கொன்று மோதி அழிய வேண்டும் என்று விரும்பியது. அதற்கான வேலைகளையே அது செய்தது.
எனவே சிறீயண்ணா இருந்திருந்தால் இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் தமிழீழம் கிடைக்க இந்திய அரசு உதவியிருக்கும் என்பதும் தற்போது இந்திய அரசைக் காப்பாற்ற முயலும் சில விசுவாசிகளின் தவறான கதைகள் ஆகும்.
புழு கூட மிதிபடும்போது துடித்து எழும். ஆனால் இத்தனை அழிவுக்கும் பிறகும் இந்த அழிவுகளுக்கு காரணமான இந்திய அரசை நியாயப்புடுத்த முயலும் இந்திய விசுவாசிகள் புழுவைவிடக் கேவலமானவர்கள்.
இந்திய அரசு எமது நண்பன் அல்ல. அது எம்மை அழிக்கும் எதிரி.
இந்திய அரசையும் அதன் ஏவல் நாய்களையும் தூக்கியெறிவோம்.

No comments:

Post a Comment