Friday, May 31, 2019

புலிகள் மீதான தடை மூலம் இந்திய அரசு கூறும் செய்தி என்ன?

•புலிகள் மீதான தடை மூலம்
இந்திய அரசு கூறும் செய்;தி என்ன?
புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஐந்து வருடத்திற்கு இந்திய அரசு நீடித்துள்ளது.
அதுவும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் இவ் வேளையில் இந்திய அரசு இதனைச் செய்துள்ளது.
புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று கூறிய இந்திய அரசு எதற்காக புலிகள் அமைப்பை தடை செய்கிறது. அதுவும் இன்னும் ஐந்து வருடத்திற்கு ஏன் தடை செய்ய வேண்டும்?
இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்களை நசுக்குவதற்காகவே புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீடித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி இந்திய ஆட்சியாளர்கள் எப்போதும் தமிழ் இன விரோதமாகவே செயற்பட்டு வருகின்றனர்.
புலிகள் மீதான தடையை இன்னும் ஜந்து வருடத்திற்கு அல்ல கடைசி தமிழன் இருக்கும்வரை நீடிக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு எற்படும்.
ஏனெனில் இந்திய அரசின் இந்த தமிழ் இனவிரோத செயல் ஒவ்வொரு தமிழனையும் புலியாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஒருவிதத்தில் நாம் இதற்காக இந்திய அரசிற்கு நன்றிதான் கூற வேண்டும். இல்லையெனில் இந்தியா ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தரப் போகிறது என்று சிலர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்பி வந்து தமிழீழம் பெற்று தரப் போகிறார்” என்று நெடுமாறன் ஐயா போன்றவர்கள் கூறுவதும் இந்திய அரசு புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கே உதவுகிறது.
எனவே இம்முறையாவது “பிரபாகரன் உயிருடன் இல்லை. அவர் திரும்பி வரப் போவதும் இல்லை” என்ற உண்மையை புலம்பெயர் ஈழத் தமிழ் அமைப்புகள் உலகத் தமிழருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment