Friday, May 31, 2019

•நீ முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை பரப்ப உனக்கு உரிமை கிடையாது!

•நீ முட்டாளாக இருக்க உரிமை உண்டு. ஆனால்
முட்டாள்தனத்தை பரப்ப உனக்கு உரிமை கிடையாது!
ஆண்டவர் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார் என்றார்கள்
ஆண்டவர் இயேசு தண்ணீரில் நடந்து காட்டினார் என்றார்கள்
ஆண்டவர் இயேசு செங்கடலை இரண்டாக பிளந்து காட்டினார் என்றார்கள்
ஆண்டவர் இயேசு மரித்து மூன்றாள் நாள் உயிர்த் தெழுந்தார் என்றார்கள்
இத்தகைய அற்புதம் செய்த ஆண்டவர் தன் தேவாலயத்தில் குண்டு வெடித்ததை தடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல அத்தகைய ஆண்டவரைக்கூட துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையே காக்க வேண்டி வந்து விட்டதே.
இப்போது நம்முன் எழும் கேள்வி என்னவெனில் தன்னையே காக்க முடியாத ஆண்டவர் தன் பக்தனை எப்படி காக்க போகிறார்?
சரி இது அவருடைய பிரச்சனை. அவரை நம்பும் பக்தனின் பிரச்சனை. ஆனால் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்களின் வரிப்பணத்தில் எதற்காக கடவுளைக் காக்க வேண்டும்?
பேசாமல் தேவாலயத்தை இழுத்து மூடினால் என்ன? ஆனால் அரசு அப்படி ஒருபோதும் செய்யாது.
ஏனெனில் மதமும் கடவுளும் தற்போது அரசைக் காக்கும் கருவிகளாக இருக்கின்றன.
அதனால்தான் தோழர் லெனின் கூறினார் “ உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்”
அதனால்தான் கிருஸ்தவ நாடான லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் கிருத்தவ தேவாலயத்திற்கு அருகில் ஒரே ரோட்டில் நாலு பள்ளிவாசல்களையும் மூன்று இந்துக் கோயில்களையும் அமைக்க அரசு அனுமதித்துள்ளது.
அதுமட்டுமல்ல பஹ்ரன் முஸ்லிம் நாட்டில்கூட மிகப்பெரிய கிருஸ்னர் கோயில் கட்ட அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் ஆஸ்திகம் என்றால் என்ன? நாத்திகம் என்றால் என்ன? என்று கேட்டார்களாம்.
அவர் சிரித்துவிட்டு தனக்கே உரியபாணியில்“ கடவுளுக்கு செலவுக்கு பணம் தேவை என்று கோயில் வாசலில் நம்பிக்கையுடன் உண்டியல் வைப்பது ஆஸ்திகம். அதே உண்டியல் களவு போய்விடும் என்று கடவுளை நம்பாது சங்கிலி போட்டு பூட்டி வைப்பது நாத்திகம்” என்றாராம்.

No comments:

Post a Comment