Tuesday, August 15, 2023

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும்

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான். அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான். கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான். அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு காவிரி தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால், ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான். இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான். வேறு ஒருத்தன் “ இந்து” வாக உணர வேண்டும் என்கிறான். இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள். மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள், கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள், தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள். கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாயப்பு என சட்டம் இயற்றுகிறார்கள். நாகலாந்தில் அம் மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என சட்டம் இயற்றியுள்ளார்கள். குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி சட்டம் இயற்றி செயற்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி ரயில்வேயில் 90 வீதமான வேலை வாய்ப்பு வட இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குங்கள் என்றால் தமிழன் என்றால் யார் என்று நக்கலாக கேட்கிறார்கள் தமிழன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக மலையாள நடிகர் அஜீத் எப்போது அடுத்த படம் நடிப்பார் என கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிறான். என்னே அவலம்? ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும். அது எப்போது நிகழும்?

No comments:

Post a Comment