Wednesday, August 30, 2023

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு

• உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு என் வாழ்வில் மறக்க முடியாத படம் இது. 1992ம் ஆண்டு கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்து வரும்போது எடுக்கப்பட்ட படம். விசாரணை சிறைவாசிக்கே கைவிலங்கு போடக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அகதியான எனக்கு கைவிலங்கு மட்டுமல்ல லீடிங்செயினும் பூட்டி இழுத்துச் சென்றார்கள். வேலுர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருந்த என்னை இவ்வாறு சுமார் 40 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வைத்தார்கள். இந்த பயணவேளையில் உணவும் வழங்க மாட்டார்கள். நான் அகதி என்பதால் நீதிமன்றம் எனக்கு உணவுப்படி தருவதில்லை. நான் முகாமைவிட்டு வெளியே செல்லும்போது உணவுப்படி வழங்க முடியாது என முகாம் நிர்வாகமும் கூறிவிட்டது. இதனால் என் தோழர்களே நீதிமன்றத்தில் காத்திருந்து எனக்கு உணவு வாங்கி தருவார்கள். இதுகுறித்து கொடைக்கானல் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டபோது தனக்கு இது குறித்து உத்தரவிட அதிகாரம் இல்லை என்றார். அதனால் எமது தோழர்கள் இப் புகைப்படத்தை எடுத்து மனிதவுரிமைகமிஷன் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள். அதையடுத்து அதன் பின்னர் எனக்கு கைவிலங்கு மற்றும் லீடிங் செயின் போடுவதில்லை. இப் படத்தை எடுத்து எனக்காக குரல் கொடுத்த அந்த தோழர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

No comments:

Post a Comment