Wednesday, August 30, 2023

சாதி தீண்டாமைக்கு எதிராக போராடியது,

சாதி தீண்டாமைக்கு எதிராக போராடியது, காவிரி நீர் உரிமைக்காக குரல் கொடுத்தது, தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்தது , இப்படி தமிழக மக்கள் தோழர் தமிழரசனை நினைவுகூர பல காரணங்கள் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்கள் தோழர் தமிழரசனை நினைவுகூர இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. தமிழ்நாட்டில் பல அமைப்புகள் ஈழத் தமிழரின் போராட்டத்தை ஆதரித்தாலும் தோழர் தமிழரசன் மட்டுமே தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றுகூறி மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்தவர். அது மட்டுமன்றி இந்திய அரசு என்றாவது ஒருநாள் சிங்கள அரசுடன் சேர்ந்து ஈழப் போராட்டத்தை அழிக்கும் என்பதை எதிர்வுகூறி இதனைத் தடுப்பதற்கு பத்தாயிரம் தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் என்றார். கலக்க வேண்டும் என்று கூறியதுடன் தானே முதல் ஆளாக வருகிறேன் என்றுகூறி ஈழம் வருவதற்காக இரண்டுமுறை வேதாரணியத்தில் வந்து காத்து நின்றார். துரதிருஸ்டவசமாக இரண்டுமுறையும் அவர் பயணம் நிகழவில்லை. நிகழ்ந்திருந்தால் இன்று வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமோ என சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக, ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்பதை கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் மூலம் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவினார். செப் - 1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்.

No comments:

Post a Comment