Wednesday, August 30, 2023

காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி பிரதமராக

காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதே கச்சதீவு சிங்கள அரசுக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த திமுக கட்சியின் கலைஞர் கருணாநிதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சியின் அண்ணாமலை கச்சதீவை மீட்போம் என்கிறார். இப்போது தமிழக முதல்வராக இருக்கும் திமுக கட்சியின் ஸ்டாலின் அவர்களும் கச்சதீவை மீட்போம் என்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் முன்னாள் முதல்வர் அதிமுக கட்சியின் எடப்பாடி அவர்களும் கச்சதீவை மீட்போம் என்கிறார். இவர்கள் கச்சதீவை சிங்கள அரசுக்கு வழங்கும்போதும் சரி இப்போது அதனை மீட்போம் என்று கூறும்போதும் சரி ஈழத் தமிழர்கள் கருத்தை அறிய அக்கறை காட்டவில்லை. கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனை தீரும் என்கிறார்கள். அதெப்படி தீரும் என்பதை இதுவரை யாரும் கூறியதில்லை. மீனவர் பிரச்சனை தீர வேண்டும் என்றால் மீனவர்களை தாக்கும் சிங்கள கடற்படைக்கு பயிற்சி வழங்குவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். சிங்கள கடற்படைக்கு போர்க் கப்பல் இலவசமாக வழங்குவதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிஙகள அரசுக்கு உதவி செய்து ஆதரவளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக அரசு இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். கடலில் குஜராத் மீனவன் கொல்லப்பட்டமைக்கு பாக்கிஸ்தான் கடற்படைக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றால் தமிழக மீனவனை கொல்லும் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழ்நாட்டில் ஏன் வழக்கு தொடர முடியாது?

No comments:

Post a Comment