Wednesday, July 31, 2024

இருவரும் ஈழத் தமிழர்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள். இருவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக இயக்கம் நடத்தியவர்கள். ஒருவர் அண்மையில் மரணமடைந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன். இன்னொருவர் அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன். மகேஸ்வரன் லண்டனில் தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்து போராடினார். பகிரதன் மதுரை மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டே இயக்கம் நடத்தினார். பகிரதன் தன் படிப்பை நிறுத்தவில்லை. ஆனால் அவரது இயக்கத்திற்கு பல இளைஞர்களை படிப்பை பாதியில் நிறுத்தி அனுப்பி வைத்தார் மாவை சேனாதிராசா. இப் பதிவில் மகேஸ்வரனையும் பகிரதனையும் ஒப்பிடுவதற்கு காரணம் இருவரது இயக்கத்தின் பெயரும் ஒன்றாக இருந்தது. மகேஸ்வரன் தனது இயக்கத்திற்கு ஆரம்பத்தில் TENA என்றே பெயர் வைத்திருந்தார். இதுதெரியாமல் பகிரதன் தனது இயக்கத்திற்கு TENA என்று பெயர் வைத்தார். இதனால் மகேஸ்வரன் பின்னர் தனது இயக்கத்தின் பெயரை TEA என்று வைத்துக் கொண்டார். மகேஸ்வரன் தனது இயக்கத்தின் வரலாற்றை பதிவு செய்யாமல் மறைந்துவிட்டது உண்மையில் பேரிழப்பாகும்.

No comments:

Post a Comment