Wednesday, July 31, 2024

கடந்த வாரம் ஜீ டிவியில்

கடந்த வாரம் ஜீ டிவியில் “சரிகமப” பக்தி பாடல் நிகழ்வு இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கு ஒரு நபர் சாமி வந்து இறங்கி ஆடுவதுதாக காட்டப்பட்டது. ரேட்டிங்காக நடத்தப்பட்ட ஒரு அப்பட்டமான செட்அப் இது என்பது நன்றாக தெரிந்தது. அதைவிட இந்த சாமி இறங்குதல் என்பது ஒருவகை மனநோய் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவர் விரும்பினால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்தனத்தை பரப்ப அவருக்கு உரிமை கிடையாது. ஒரு டிவி நிறுவனம் பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் தனது வியாபாரத்திற்காக இப்படி முட்டாள்தனத்தைப் பரப்ப இடமளிக்கக்கூடாது. காவல்துறையினர் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கேள்வி – சாமி இறங்கியதாக கூறப்படும் நபர்கள் எல்லாம் அவ் வேளைகளில் தமிழில்தான் பேசுகின்றனர். அப்படியென்றால் சாமிக்கு தமிழ் தெரியும் அல்லவா. அப்படியிருக்க எதற்கு சாமிக்கு சமஸ்கிருதத்தில் பூஜை செய்கின்றனர்?

No comments:

Post a Comment