Wednesday, July 31, 2024

மீண்டும் காமராசர் ஆட்சி வேண்டுமா?

•மீண்டும் காமராசர் ஆட்சி வேண்டுமா? காமராசரை விரட்டிய திராவிட கட்சிகள்கூட காமராசர் ஆட்சி தருவோம் என்கின்றனர். திராவிட ஆட்சிகளின் ஊழலைப் பார்த்துவிட்டு சில தமிழத்தேசியர்களும் காமராசரைப் புகழ்கின்றனர். காமராசர் ஆட்சி என்பது காங்கிரஸ் ஆட்சியே. அந்த ஆட்சியில்தான் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டது. இந்தி மொழி திணிக்கப்பட்டது. தமிழ் நிலம் தாரை வார்க்கப்பட்டது. தமிழினத்தின் இன்றைய இழி நிலைக்கு காமராசரின் காங்கிரஸ் ஆட்சியே காரணம். மீண்டும் காமராசர் ஆட்சி எனக்கூறுவது மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதே. எனவே இனி அமைய வேண்டியது காமராசர் ஆட்சி அல்ல. தமிழத்தேசிய ஆட்சியே. விருதுநகர் தபால்நிலைய வெடிகுண்டு வழக்கில் காமராசர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது உண்மையா ? அப்படியென்றால் அவர் தீவிரவாதியா? அல்லது சுதந்திரப் போராட்ட தியாகியா? ஈழப் போராளிகளை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்போர் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றனர்?

No comments:

Post a Comment