Wednesday, July 31, 2024

யாரையும் தொந்தரவு செய்யாத

யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு? – அருந்ததி ராய் 2010ல் லண்டனில் ஒரு கூட்டத்தில் அருந்ததி ராய் உரையாற்றினார். இந்தியாவில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றி பேசியவர் ஈழத்தில் நடந்த இனப் படுகொலை பற்றியும் பேசினார். அண்மைக் காலத்தில் எம் கண் முன்னே ஒரு பெரிய இனப்படுகொலை இந்திய அரசின் உதவியுடன் நடந்திருக்கிறது. ஆனால் அதுபற்றி நம்மில் பலர் பேசாமல் இருக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஈழத்தில் நடந்த அந்த இனப்படுகொலை இந்த மேடையில் பதிவு செய்யப்பட வேண்டும். யாராவது ஈழத் தமிழர் இந்த கூட்டத்தில் இருந்தால் மேலே வந்து சில வரிகள் கூறும்படியும் அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் பெருமளவு வெள்ளை இனத்தவர்களும் சீக்கிய இனத்தவர்களுமே இருந்தனர். அதில் அவர் ஈழத்து இனப் படுகொலை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் பேசினார். அதுதான் அருந்ததி ராய். அவர் காட்டுக்குள் சென்று நக்சலைட்டுகளுடன் உரையாடி அவர்களின் கருத்துகளையும் வெளி உலகிற்கு அறிய தந்திருக்கிறார். அவருடைய பேச்சுகள் எழுத்துக்கள் இந்திய அரசுக்கு எரிச்சல் தருகின்றன. அதனால்தான் பல வருடங்களுக்கு முன்னர் பேசிய ஒரு பேச்சுக்கு தற்போது வழக்கு பதிவு செய்து அவர் குரலை அடக்க முனைகின்றனர்.

No comments:

Post a Comment