Wednesday, July 31, 2024

ராஜிவ் காந்தி போர்பஸ் திருடன்

ராஜிவ் காந்தி போர்பஸ் திருடன் என்றும் அவர் ஒழிய வேண்டும் என திமுக கட்அவுட் வைத்திருந்தது. சைதாப்பேட்டை வளைவில் வைக்கப்பட்ட இக் கட்அவுட்டை நானே என் கண்ணால் கண்டிருக்கிறேன். ஆனால் அடுத்த மாதம் ராஜீவ் காந்தி ஒழிந்ததும் “இளம் தலைவர் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு” என முரசொலியில் கலைஞர் இரங்கல் தெரிவித்தார். அதேபோன்று “வயதாகிவிட்டது எனவே சம்பந்தர் ஐயா பதவி விலக வேண்டும்” எனக் கோரியவர் சுமந்திரன். அதுமட்டுமன்றி “இரண்டாம் முள்ளிவாய்க்காலுக்கு வயதான சம்பந்தர் ஐயாவே பொறுப்பு கூறவேண்டும்” என்று கடந்த மாதம் சுமந்திரன் கூறியிருந்தார். இன்று சம்பந்தர் ஐயா இறந்தவுடன் அவரது தலைமையை புகழ்கிறார். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கண்ணீர் வடிக்கிறார். உயிரோடு இருக்கும்போது ஒழிய வேண்டும் என்கிறார்கள். ஒழிந்ததும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார்கள். அப்படியென்றால் மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்து புனிதப்படுத்துகிறதா? அல்லது, தமிழ் மக்கள் முட்டாள்கள், தாம் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள் என இவர்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா?

No comments:

Post a Comment