Tuesday, October 30, 2018

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!
மாணவர்கள் அமைதியாக படிக்க விரும்பினாலும் அரசு விடுவதில்லை.
வேறு வழியின்றி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவர்கள் பாத யாத்திரை ஆரம்பித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
தமிழ் தலைவர்கள் தமக்கு பதவி, சொகுசுவாகனம் பொலிஸ் பாதுகாப்பு பெறுவதில் காட்டிய அக்கறையை அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காட்டவில்லை.
தமிழ் மக்களின் வாக்கில் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசு படுகொலை செய்த ராணவத்தை காப்பாற்ற முயல்கிறதேயொழிய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அக்கறை கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் காந்தி ஜயந்தி கொண்டாடி மகிழும் இந்திய தூதுவரும் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.
தானே நேரடியாக களத்தில் இறங்குவதாக அறிக்கைவிட்ட சம்பந்தர் அய்யாவும் இதுவரை எதையும் செய்யவில்லை.
எனவேதான் வேறு வழியின்றி மாணவர்கள் களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.
தலைவர்களை நம்பிக்கொண்டிருந்தால் இனி எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே மக்கள் ஒன்று திரண்டு போராடுவதே வழியாகும்.
அடிமையாக கிடப்பதைவிட எழுந்து நின்று மடிவதே மேல்!

No comments:

Post a Comment