Tuesday, October 30, 2018

ஒரு லட்சம் இந்திய ராணுவம் செய்ய முடியாததை ஒரு இந்திய தூதுவரால் செய்துவிட முடியுமா?

•ஒரு லட்சம் இந்திய ராணுவம் செய்ய முடியாததை
ஒரு இந்திய தூதுவரால் செய்துவிட முடியுமா?
அமைதிப்படை என்று வந்த ஒரு லட்சம் இந்திய ராணுவம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.
சர்வாதிகாரி ஹிட்லர்கூட மருத்துமனைகள் மீது தாக்குதல் நடத்தியதில்லை. ஆனால் இந்திய ராணுவம் யாழ் மருத்துமனை மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளையும் மருத்துவர்களையும் கொன்றது.
சீக்கிய இன மக்களை கொன்றமைக்காக மன்னிப்பு கோரிய இந்திய பிரதமர் மோடி யாழ் மருத்துமனைப் படுகொலைக்காகவது குறைந்த பட்சம் மன்னிப்பு கோரியிருக்கலாம். ஆனால் அவர் இதுவரை கோரவில்லை.
மன்னிப்பு கோரவில்லை என்றாலும் பரவாயில்லை. மாறாக அதே யாழ் மருத்துமனை முன்பு காந்தி சிலையை நிறுவி கொண்டாடுகிறார் யாழ் இந்திய தூதர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய பிரதமர் மோடி காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேக்கு இந்தியாவில் சிலை வைத்து வணங்கிறார்.
ஆனால் மறுபுறத்தில் வடக்கு கிழக்கு முழுவதும் இருபது காந்தி சிலைகள் நிறுவப்படும் என்கிறார் யாழ் இந்திய தூதர்.
அதுமட்டுமன்றி இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை ஈழத் தமிழர்கள் நினைவு கூர்வதையும் தடுக்கும் யாழ் இந்திய தூதர் அதே நேரத்தில் தமிழ் மக்களை கொலை செய்த இந்திய ராணுவத்திற்கு யாழ் மண்ணில் நினைவு மண்டபம் கட்டியுள்ளார்.
யாழ் மண்ணில் நினைவு சின்னம் கட்டியது மட்டுமன்றி இந்திய ராணவ தளபதியை அழைத்து வந்து அதில் விழா எடுக்கிறார்.
யாழ் இந்திய தூதர் நேடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கே அஞ்சாத ஈழத் தமிழர்கள் ஒரு தூதுவரின் மிரட்டலுக்கு அஞ்சி விடுவார்களா என்ன?
தமது உறவுகளுக்கு துணிந்து அஞ்சலி செலுத்தியதன் மூலம் ஈழத் தமிழர்கள் இந்திய தூதரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளனர்.
இங்கு வேதனை என்னவென்றால் காந்தி சிலைக்கு முன்பு யாழ் இந்திய தூதர் நடத்திய விழாவில் பங்கெடுத்த தமிழ் தலைவர்களில் ஒருவர்கூட அதே யாழ் மருத்துவமனையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நடந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
ஆனாலும், தலைவர்களை விலைக்கு வாங்கினாலும் தம்மை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் ஒருமுறை இந்திய தூதருக்கு காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment