Tuesday, October 30, 2018

இந்திய உளவுப்படை (RAW) இலங்கை ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி செய்ததா?

இந்திய உளவுப்படை (RAW)
இலங்கை ஜனாதிபதியை
கொலை செய்ய முயற்சி செய்ததா?
தனது தோல்விக்கு இந்திய உளவுப்படைதான் காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச கூறினார்.
தன்னை கொலை செய்ய இந்திய உளவுப்படை முயற்சி செய்கிறது என இன்றைய ஜனாதிபதி மைத்திரி கூறுகிறார்.
இவ்வாறு இந்திய உளவுப்படை மீது குற்றம் சாட்டுபவர்கள் இலங்கையின் அதி உச்ச பொறுப்பில் இருப்பவர்கள்.
இந்திய உளவுப்படை இன்று நேற்று அல்ல 1983ம் ஆண்டில் இருந்தே இலங்கை பிரச்சனையில் மூக்கை நுழைத்து செயற்படுகிறது.
1983ம் ஆண்டு “டெலோ” இயக்கத்தின் மூலம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோரை இந்திய உளவுப்படை கொன்றபோதே இலங்கையர் அனைவரும் ஒருமித்து செயற்பட்டிருந்தால் இன்று ஜனாதிபதி கொலை முயற்சி என்ற பிரச்சனை வந்திருக்காது.
இன்றும்கூட இந்தளவு விபரங்கள் வெளிவந்தபோதும் இந்திய உளவுப்படையினை எந்தவொரு இலங்கை தலைவரும் கண்டிக்க முன்வரவில்லை.
எமது நாட்டில் எப்படி அந்நிய நாட்டு உளவுப்படை தலையிடலாம்? என்று கேட்கும் தைரியம் கொண்ட ஒரு தலைவர்கூட இலங்கையில் இல்லாதது துரதிருஸ்டமே.
கொழும்பு துறைமுக எண்ணெய்குதத்தை இந்தியாவுக்கு கொடுப்பதற்கு பிரதமர் ரணில் இரகசியமாக சம்மதித்திருந்த வேளையில் ஜனாதிபதி மைத்திரி இணங்க மறுத்துள்ளார் என்றும் அதனால் ஜனாதிபதியை உளவுப்படையின் மூலம் இந்தியா மிரட்டுகிறது என்று சிலர் கூறுகிறார்கள்.
அதேவேளை வேறுசிலர், அடுத்த ஜனாதிபதியாக ரணிலை கொண்டுவர இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருந்த மைத்திரி ஏமாற்றத்தில் இந்திய உளவுப்படையின் மீது பழி போடுகின்றார் என்றும் கூறுகின்றனர்.
இங்கு கவனிக்கதக்க விடயம் என்னவென்றால் ஜனாதிபதியை இந்திய உளவுப்படை கொலை செய்ய முயன்றது உண்மையா பொய்யா என்றுதான் பலரும் ஆராய்கின்றனரேயொழிய யாருமே இலங்கையில் இந்திய உளவுப்படையின் செயற்பாடு இருப்பதை மறுக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை.
தலைவர்கள் தமது பதவி நலனுக்காக இந்திய உளவுப்படைக்கு துணை போகலாம். ஆனால் இலங்கை மக்கள் இந்திய உளவுப்படையின் செயலையும் இந்திய ஆக்கிரமிப்பையும் அனுமதிக்கப் போகின்றார்களா?
இதுவே இன்னு எழுந்துள்ள முக்கியமான கேள்வி. இதற்கான பதில் மிக விரைவில் இலங்கை மக்களால் இந்தியாவுக்கு வழங்கப்படும்!

No comments:

Post a Comment