Tuesday, October 30, 2018

•கேப்பாப்புலவு கேட்பாரற்ற புலவா?

•கேப்பாப்புலவு கேட்பாரற்ற புலவா?
சுமந்திரன்- ஜயா இந்த கேப்பாப்புலவு மக்கள் பிரச்சனை பற்றி என்ன செய்வது?
சம்பந்தர் அய்யா- அது சிங்களவர் பிரதேசம் ஆயிற்றே. நாம் ஏன் அதைப் பற்றி பேச வேண்டும்?
சுமந்திரன். ஜயா! அது கெப்பிற்றிப்பொலாவ. இது கேப்பாப்புலவு. இது தமிழர் பிரதேசம்.
சம்பந்தர் அய்யா- ஓ! அப்படியா? அங்கை என்ன பிரச்சனையாம்?
சுமந்திரன்- அந்த மக்கள் 610 நாளாக போரடிக் கொண்டிருக்கினம். தங்கள் நிலத்தை இராணுவத்திடமிருந்து பெற்று தரும்படி கேட்கினம்.
சம்பந்தர் அய்யா- என்ரை சொந்த தொகுதி திருகோணமலையிலேயே கண்ணியா கிண்ணியா எல்லாம் பறிபோய்க் கொண்டிருக்கு. அதைப் பற்றியே வாய் திறக்காத நான் கேப்பாப்புலவுக்கு ஏன் கவலைப்பட வேண்டும்?
சுமந்திரன் - அதில வந்து ஜயா ஒரு சின்ன பிரச்சனை. என்னவென்றால் இந்த கம்பஸ் பொடியள் இப்ப கேப்பாப்புலவு மக்களுக்காக போராட வெளிக்கிட்டிருக்கினம்.
சம்பந்தர் அய்யா- இந்த பொடியளுக்கு ஏன் இந்த வேலை? போனமாசம் சிறைக் கைதிகளுக்காக அநுராதபுரத்திற்கு நடக்கினம். இந்த மாதம் கேப்பாப்புலவு மக்களுக்காக குரல் கொடுக்கினம்.
சுமந்திரன்- அதுதான்யா பிரச்சனை. இப்படியே போனால் அடுத்த லெக்சனுக்கு இந்த பொடியள் சொல்லுறவைக்குத்தான் மக்கள் வோட்டு போடுவார்கள். அப்புறம் எங்கள் கதி என்னாவது?
சம்பந்தர் அய்யா- இந்த மகிந்த ரணில் பிரச்சனையில என்ர பதவி பறிபோயிடும் போலக்கிடக்கு. நான் பதவியை எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறன். இதில இந்த பொடியள் கேப்பாப்புலவு பிரச்சனையை கிளப்பினால் நான் எதையென்று பார்ப்பது?
சுமந்திரன்- கொட்டும் மழையில் மாணவர்கள் மக்களுடன் ஊர்வலம். மக்களும் மாணவர்களும் போராட வேண்டும் என்றால் கட்சிகள் எதற்கு? தலைவர்களுக்கு பதவிகள் எதற்கு? என்றெல்லாம் பேஸ்புக்கில எழுதிக் கிழிக்கிறாங்கள் ஜயா.
சம்பந்தர் அய்யா- உண்மைதான். இதை எப்படியாவது சமாளிக்க வேண்டும். நான் ஒருக்கா இந்தியா போறன். அங்கே மோடியுடன் சேர்ந்து ஒரு போட்டோ பிடித்து அனுப்பறன். அதை நீர் பேப்பர்;காரன்களுக்கு கொடுத்து “பிரதமர் மோடி இலங்கை அரசு மீது மிகவும் சினம் கொண்டார். தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது” என்று ஒரு அறிக்கை விடும். அதேவேளை “போராட்டம் வெடிக்கும்” என்று மாவை சேனாதிராசாவையும் வழக்கம்போல யாழ்ப்பாணத்தில் ஒரு அறிக்கை விடும்படி கூறும். அப்புறம் வழக்ம்போல எல்லாம் சரியாயிடும்.
குறிப்பு – கீழே உள்ள சம்பந்தர் அய்யாவின் போட்டோவை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
(அ) தனது பதவியை எப்படி காப்பாற்றவது என்று அய்யா சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
(ஆ) அடுத்த தீபாவளிக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று இந்த தீபாவளிக்கு எப்படி அறிக்கை விடுவது என யோசிக்கிறார்.
(இ) இந்திய தூதரின் பார்ட்டியில் அடித்த தண்ணி இன்னும் முறியாமல் தூங்கிறார்.
(ஈ)மேற்கூறிய எதுவுமில்லை., ஜயா செத்துவிட்டார்.

No comments:

Post a Comment