Wednesday, October 31, 2018

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றால்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றால்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்றிகள் தானே?
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார் தோழர் லெனின். அப்படியென்றால் அங்கு உள்ள எம்.பி மார் பன்றிகள்தானே?
எமது எம்.பிமாரை பன்றிகள் என்றால் அவர்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவர்களின் செம்புகளுக்கு வந்துவிடுகிறது.
அன்று லெனின் கூறியது உண்மைதான் என்பதை இன்று எமது எம்பி மார்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று ஒரு எம்.பி யின் விலை 60 கோடி ரூபா என்கிறார்கள். எங்கிருந்து இந்த பணம் வருகிறது? எல்லாம் திருட்டு பணம்தானே?
இப்படி எழுதியவுடன் உடனே ஓடிவந்து நாலு லைக் வேண்டத்தான் இப்படி எழுதுவதாக கூறுவார்கள்.
இப்ப எனது கவலை என்னவென்றால் தோழர் லெனினும் நாலு லைக் வேண்டத்தான் கூறியதாக எழுதிவிடப் போகிறார்களே என்பதுதான்.
ஏனெனில் பாவம் அவர்களுக்கு லெனின் செத்துவிட்டார் என்பதுகூட தெரியாது. லெனினையும் யாரோ ஒரு முகநூல் போராளி என்றுதான் நினைப்பார்கள்.
சரி, இப்ப நான் இன்னொரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். “தேர்தல் பாதை திருடர் பாதை” என்று புரட்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் அரசியல்வாதிகள் திருடர்கள் என்றுதானே அர்த்தம்.
சாதாரண திருடர்களுக்கும் இந்த அரசியல் திருடர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி இதைப் படிக்கும்பொது உங்கள் மனதில் தோன்றலாம்.
சாதாரண திருடன் எம்மை தேர்வு செய்கிறான். அரசியல் திருடனை நாம் தெரிவு செய்கிறோம். அவ்வளவே.
அதாவது எமது எந்த வீட்டில் திருடுவது என்பதை திருடனே முடிவு செய்கிறான். அரசியலில் யார் திருடவேண்டும் என்பதை நாமே வோட்டு போட்டு தெரிவு செய்கிறோம்.
அதுமட்டுமல்ல இன்னொரு முக்கிய வித்தியாசமும் உள்ளது. சாதாரண திருடனை பொலிஸ் கைது செய்யும். அரசியல் திருடனுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கும்.
குறிப்பு- இந்த பதிவை படித்தவுடன் சிலருக்கு சுமந்திரன் நினைவுக்கு வந்தால் அதற்கு அட்மின் பொறுப்பு அல்ல.

No comments:

Post a Comment