Wednesday, October 31, 2018

வெல்லும்வரை வீண் முயற்சி என்று கூறுவார்கள்

•வெல்லும்வரை வீண் முயற்சி என்று கூறுவார்கள்
வென்ற பின் விடாமுயற்சி என்று பாராட்டுவார்கள்!
மார்க்ஸ் மார்க்சியத்தை எழுதி வெளியிட்டபோது “இது நடைமுறைக்கு உதவாது. நூலகங்களில் அடக்கி வைப்பதற்குத்தான் லாயக்கு” என்றார்கள்.
அதன்பின் லெனின் மார்க்சியத்தை முன்வைத்து ரஸ்சிய புரட்சியை செய்தபோது “ தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை. முழு உலகப் புரட்சி செய்ய வேண்டும்” என்றார்கள்.
அப்புறம் மாசேதுங் தேசிய முதலாளிகளை உள்ளடக்கி புதிய ஜனநாயகப்புரட்சியை முன்னெடுத்தபோது “இது மார்க்சியத்திற்கு விரோதமானது” என்றார்கள்.
தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் மார்க்சிய லெனிய மாசேதுங் சிந்தனையில் தமிழ்தேசிய விடுதலையை முன்வைத்து போராடிய போது அவரைப் “பயங்கரவாதி” என்றார்கள்.
இலங்கையில் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதை “புலித் தேசியம்” என்று முத்திரை குத்த முனைகின்றனர்.
இவ்வாறு வரலாறு முழுவதும் தம்மை மார்க்கியவாதிகள் எனக்கூறும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் தாம் போராடாமல் இருப்பதற்கே இத்தகைய காரணங்களை கூறிவருகின்றனர்.
இவர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் விரைந்து வெற்றியைப் பெறுவதே!

No comments:

Post a Comment