Tuesday, October 30, 2018

•தேர்தல் வரும் பின்னே! அரசியல்வாதிகள் வருவர் முன்னே!

•தேர்தல் வரும் பின்னே!
அரசியல்வாதிகள் வருவர் முன்னே!
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோல் அரசியல்வாதிகள் மக்கள் முன்னே வருகிறார்கள் எனில் தேர்தல் வருகிறது பின்னே என்று அர்த்தம்.
இத்தனை நாளும் வராத சுமந்திரன் எம்.பி அவர்கள் திடீரென்று வந்து மாணவர்களை சந்தித்து பாராட்டியிருக்கிறார் எனில் மாகாணசபை தேர்தல் வரப் போகிறது என்று அர்த்தம்.
தேர்தலுக்காக வந்திருந்தாலும்கூட அவர் மாணவர்களை சந்தித்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒரு நல்ல விடயம்தான்.
ஏனெனில் கடந்த வருடம் சிறந்த புள்ளிகள் பெற்ற பருத்தித்துறை மாணவனை வீடு சென்று பாராட்டியிருந்தார் வடமாகாண ஆளுநர் கூரே அவர்கள்.
இதனை சுட்டிக்காட்டி ஒரு சிங்கள ஆளுநருக்கு இருக்கும் உணர்வுகள் ஏன் எமது தமிழ் தலைவர்களுக்கு இல்லை? எனக் கேட்டிருந்தோம்.
எனவே இம்முறை தமிழரசுக்கட்சியின் சார்பில் சுமந்திரன் மாணவர்களை சந்தித்து பாராட்டியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
அது சரி எங்கள் வடமாகாண கல்வி அமைச்சர் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு கேள்வி எழலாம்.
பாவம். அவருக்கு யாழ் இந்திய தூதருடன் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடவே நேரம் சரியாய் போய்விடுகிறது. இதில் மாணவர்களை சந்தித்து பாராட்ட ஏது நேரம்?

No comments:

Post a Comment