Tuesday, October 30, 2018

வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்

வந்தார்கள்
கொன்றார்கள்
சென்றார்கள்
இது ஜீனியர்விகடனில் மதன் எழுதிய “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” கதை அல்ல.
இது அமைதிப்படை என்று வந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு சென்ற இந்திய ராணுவத்தின் கதை.
கொடுங்கோலன் என்றழைக்கப்பட்ட கிட்லர்கூட எதிரி நாட்டு மருத்துவமனைகளையோ நூலகத்தையோ தாக்கியது கிடையாது.
ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் யாழ் மருத்துவமனையைத் தாக்கி பல அப்பாவி தமிழ் மக்களை கொன்றார்கள்.
யாழ் மருத்துமனையில் மட்டும் படுகொலைகள் நிகழ்த்தப்படவில்லை. வல்வையில் நடத்தப்பட்டது. பிரம்படியில் நடத்தப்பட்டது.
வடக்கு கிழக்கு முழுவதும் சுமார் இரண்டரை வருடங்கள் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள்.
80 வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்த பெருமை இந்திய அமைதிப்படைக்கே சேரும் என அன்றைய பிரதமர் பிரேமதாசா கூறியிருந்தார்.
புலிகள் பொதுமக்களுக்குள் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததால் அப்பாவி பொது மக்கள் இறக்க நேரிட்டது என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு என்ன காரணம்? ஏன் இதுவரை ஒரு ராணுவம்கூட இதற்காக தண்டிக்கப்படவில்லை?
அதுமட்டுமன்றி, அமைதிப்படையின் முதல் குண்டு புலிகளை தாக்கவில்லை. மாறாக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையல்லவா தாக்கியது.
48 மணி நேரத்தில் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் அமைதிப்படை என்று வந்தார்கள்
அவர்கள் வெறும் துப்பாக்கியுடன் மட்டும் வரவில்லை. பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்களுடன் வந்தார்கள்.
ஒருபுறம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்தினார்கள். மறுபுறம் புளட், டெலோ போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கூறினார்கள்.
இத்தனையும் இந்திய ராணுவம் செய்தது தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல. மாறாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காகவே.
இங்கு கொடுமை என்னவென்றால் இத்தனையும் செய்துவிட்டு அதற்காக இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமன்றி தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதைக்கூட மிரட்டி தடுக்கின்றனர்.

No comments:

Post a Comment